பொது செய்தி

தமிழ்நாடு

இனிப்புடன் இலவச, 'ஹெல்மெட்'; மணப்பாறை போலீசார் அசத்தல்

Added : ஜன 24, 2020 | கருத்துகள் (2)
Advertisement
helmet,sweet,free_helmet,trichy

திருச்சி : 'ஹெல்மெட்' அணியாமல் வந்தவர்களுக்கு இனிப்புடன், இலவச, 'ஹெல்மெட்' வழங்கி, நுாதன விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நேற்று, சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, இருசக்கர வாகனங்களில், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு, மணப்பாறை, டி.எஸ்.பி., குத்தாலிங்கம் இனிப்பு வழங்கி, 'ஹெல்மெட் அணிந்து, உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என, பிரசாரம் செய்தார்.

போக்குவரத்து போலீசார் சார்பில், 20 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. இந்த பிரசாரத்தின் போது, எமர்தர்மன் வேடம் அணிந்த நபர், உயிரின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், உடன் இருந்தார். அதேநேரம், ஹெல்மெட் அணிந்து வந்த நபர்களுக்கு, போலீசார், இரண்டு லட்டுகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-ஜன-202011:37:47 IST Report Abuse
Malick Raja குறைந்த பட்சமாக ரூ 100.இல்லாமல் இருசக்கரவாகனத்தில் செல்லமுடியாத நிலை இருப்பது ஒவ்வொரு வாகணஒட்டிகளுக்கும் தெரியும் . அந்நிலை மாற காவல்துறை முயலவேண்டும் .. ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்கிறார் அவரை போக்குவரத்து காவல்துறை காவலர் தடுத்து நிறுத்தி பரிசோதிக்கிறார் . அணைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறது ..தலைக்கவசமும் இருக்கிறது .. ரூ .100.கொடுத்துவிட்டு போக சொல்கிறார் .. என்னிடம் அனைத்தும் சரியாக இருக்கிறதே என்று பைக் காரர் கேட்க ..காவலர் எங்கேயா லைட்டில் கருப்பு ஸ்டிக்கர் என்றார் .. உடனே பைக் காரர் ரூ .100. கொடுத்துவிட்டு போகவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுகிறார் .. ஆக 100.க்கு 99% இதுதான் நிலை ..1% தப்பித்தவறி போக்கு காட்டுவதுபோல இனிப்பு கொடுப்பதும் ஒரு நன்மையாவது இருக்கிறதே என்பதே உண்மை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X