மேகதாது அணை: கர்நாடகா கோரிக்கை

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (3)
Advertisement
Mekedatu,Karnataka,SupremeCourt,TamilNadu,மேகதாது, கர்நாடகா, தமிழகம், தமிழ்நாடு, சுப்ரீம்கோர்ட், உச்சநீதிமன்றம்

புதுடில்லி: 'தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகா மாநிலம், சென்னகேசவா மலையில், தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக, 432 கி.மீ., பயணித்து, கடலூர் அருகே, வங்கக் கடலில் கலக்கிறது. இந்நிலையில், தமிழகத்தின் எல்லையை ஒட்டி, கர்நாடகா பகுதியில், தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே, புதிய அணை கட்ட, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இ ந்த பணிக்கான, விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய, கர்நாடகா அரசுக்கு, மத்திய நீர்வள கமிஷன் அனுமதி அளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில், 'கர்நாடக அரசு அணை கட்டினால், தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் அழியும். அதனால், அணை கட்டுவதற்கு, கர்நாடகாவுக்கு தடை விதிக்க வேண்டும். இதற்கு திட்ட அறிக்கை தயார் செய்ய வழங்கப்பட்டுள்ள அனுமதியை, ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் கன்வில்கர், ஹேமந்த் குப்தா, தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று நடந்தது.

கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'மேகதாது அணை திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு, மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையில் சிறிதும் நியாயமில்லை. தமிழகத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்பதுதான், தமிழகத்தின் கோரிக்கை' என்றார். இதன் பின், விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rganesan1965 - Nanganallur,Chennai-600 061.,இந்தியா
24-ஜன-202016:29:56 IST Report Abuse
rganesan1965 நமது நாட்டுக்கு மிக மிக அவசிய மற்றும் அவசர தேவையே நாம் இந்தியர்கள் என்ற கருத்தாக்கம்தான். மாநிலங்களின் தலைவர்கள் யாராக இருந்தாலும் சரி இன்னமும் நான் இந்தியன் என்று பேசாமல், நான் கன்னடன், நான் தெலுங்கன், நான் தமிழன், நான் மலையாளி என்று பிளவு படுத்தும் எவராக இருந்தாலும் அவர்களை உடனே களையெடுத்தல் மிக மிக அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-ஜன-202013:57:34 IST Report Abuse
தமிழ்வேல் மத்திய அரசின் சுற்றுச் சுழல்துறைதான் அணைக்கட்டுவதற்கான ஆய்வு செய்யலாம் என்று அனுமதி தந்துவிட்டதே.... அப்புறம் எதுக்கு வழக்கு ?
Rate this:
Share this comment
Cancel
atara - Pune,இந்தியா
24-ஜன-202007:42:56 IST Report Abuse
atara Waste of task to come in to politicial , So let water stored in karnataka any how excess water and Banglaore sewerage water they have to sent out in the kanakapura drainage line along with the water flow , how ever the water will be self purified and moved into Stanley and Bavani reservoirs.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X