இந்தியா - பாக்., வர்த்தகம் சரிவு: காஷ்மீர் பிரச்னை எதிரொலி

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (2)
Advertisement

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரம் காரணமாக, இந்தியா - பாக்., இடையேயான பரஸ்பரவர்த்தகம் வெகுவாக சரிவடைந்துள்ளது.






மத்திய அரசு, கடந்த ஆண்டு, ஆக., 5ல் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370வது சட்டப் பிரிவை நீக்கியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாக்., காஷ்மீர் விவகாரத்தை, சர்வதேச பிரச்னையாக மாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.இதையடுத்து, பாக்., அரசு, இந்தியா உடனான வர்த்தகத்திற்கு தடை விதித்தது. இதன் காரணமாக, பாக்., - இந்தியாபரஸ்பர வர்த்தகம் குறைந்துள்ளது.

இது குறித்து, பாக்., ரிசர்வ் வங்கியின் அறிக்கை அடிப்படையில், 'டான்' பத்திரிகை வெளியிட்டு உள்ள செய்தி:பாகிஸ்தான், 2019-- 20ம் நிதியாண்டில், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாதங்களில், இந்தியாவுக்கு, 117 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது, முந்தைய, 2018 --19ம் நிதியாண்டின், இதே காலகட்டத்தில், 149 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து, பாக்., செய்த இறக்குமதியின் மதிப்பு, 6,055 கோடியில் இருந்து, 2,002 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.




இதே காலகட்டத்தில், சீனாவில் இருந்து, பாக்., செய்த இறக்குமதியின் மதிப்பு, 35 ஆயிரம் கோடியில் இருந்து, 33 ஆயிரத்து,600 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதேசமயம், பாக்., சீனாவுக்கு மேற்கொண்ட ஏற்றுமதி, 6,230 கோடி ரூபாயில் இருந்து, 6,552 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பாக்.,கின் ஏற்றுமதி வர்த்தகத்தில், சீனாவிற்கு அடுத்த இடத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜன-202010:16:26 IST Report Abuse
பரம்பொருள் எங்கள குண்டுவெக்க அனுமதிச்சாதான் நாங்க உங்ககிட்ட இருந்து பொருட்களை வாங்குவோம். பாக்கிகளின் நிலைப்பாடு.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
24-ஜன-202007:56:54 IST Report Abuse
 N.Purushothaman மலேஷியா நேற்று இந்தியாவில இருந்து சக்கரை இறக்குமதியை அதிகப்படுத்தி கொள்ள விருப்பம் தெரிவித்து இந்தியாவின் கோவத்தை தணிக்க முன் வந்துள்ளது ....காரணம் பாமாயில் முடிவால் அந்நாட்டிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டு உள்ளது ...இந்தியாவின் வலிமையை பல நாடுகள் உணர்ந்தே உள்ளன ...பாகிஸ்தான் ஒழுங்காக இருந்தால் நலம் ...இல்லைன்னா சேதாரம் அவுங்களுக்கு தான் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X