பொது செய்தி

இந்தியா

‛தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டாம்'

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி: 'தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் நிலுவை தொகையை வசூலிக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, மத்திய தொலைதொடர்பு துறையின் உரிம நிதிப் பிரிவு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.






பார்தி ஏர்டெல், வோடபோன், டாடா டெலிசர்வீஸ் உள்ளிட்ட 'மொபைல்' போன் சேவை நிறுவனங்கள், 'சரி செய்யப்பட்ட மொத்த வருவாய்' அடிப்படையில், தொலைதொடர்பு துறைக்கு, 88 ஆயிரத்து, 624 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன. இத்தொகையை, 23ம் தேதிக்குள் செலுத்துமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், நிலுவை தொகையை முழுமையாக தர மறுத்த தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள், தவணையில் செலுத்த அனுமதிக்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.இந்த மனு, அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் 'கெடு' நேற்றுடன் முடிவடைந்த நிலையில், உரிம நிதிக் கொள்கைப் பிரிவு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அதில், 'நிலுவை தொகைக்காக, தொலைதொடர்பு சேவை நிறுவனங்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.





இதனிடையே, முகேஷ் அம்பானியின் 'ஆர்ஜியோ' நிறுவனம், நேற்று, தொலைதொடர்பு துறைக்கு, இம்மாத இறுதி வரையிலான, சரி செய்யப்பட்ட வருவாயாக, 195 கோடி ரூபாய் செலுத்தியது. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, சரி செய்யப்பட்ட வருவாயை, ஆர்ஜியோ செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது..

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜன-202008:24:21 IST Report Abuse
ஆப்பு வசூல் செய்ய தீர்ப்பளித்த நீதிமன்றத்தின் முகத்தில் கரி...
Rate this:
Share this comment
Cancel
24-ஜன-202008:22:56 IST Report Abuse
ஆப்பு ஆமாம்...ஏழைப் பங்காளிகளின் ஆட்சியில் கார்ப்பரேட்களுக்கு கருணை காட்டுவாங்க. மக்கள் வங்கிக் கணக்கிலிருந்து உருவுவாங்க.
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-ஜன-202008:59:25 IST Report Abuse
ஆரூர் ரங்அரசுக்கு இவ்வள்வு கட்டவேண்டியிருக்கும் என்பதை அந்தக் கம்பெனிகள் முன்பே அறிந்திருந்தால் பத்துபைசாவுக்கெல்லாம் கால் பண்ணக்கொடுத்திருக்கமாட்டார்கள் . இப்போ ஒரே வழி கால் கட்டணங்களை அதிகரித்து அந்தப் பணத்தில் தவணை தவணையாகக் கட்டுவதுதான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X