ஹிந்து பெண் பாக்.,கில் மத மாற்றம்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (19)
Advertisement
Pakistan,Hindu_Girl,Converted,Islam,Abducted,பாகிஸ்தான்

கராச்சி : பாகிஸ்தானில், கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டு, கடத்தப்பட்ட சிறுபான்மையின ஹிந்து பெண்ணை, பெண்கள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பும்படி, கராச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். சிந்து மாகாணத்தில் ஹிந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர். இங்கு வசித்து வரும் விஜய குமார் என்பவர், போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார்.

அதில் கூறப்பட்டிருந்ததாவது: என் மகள், 11ம் வகுப்பு படித்து வந்தாள். சமீபத்தில், அலி ராஜா என்பவர், என் மகளை கடத்திச் சென்று, கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்துக்கு மாற்றி, திருமணம் செய்தார். என் மகள், 'மைனர்' என்பதால், அலி ராஜாவிடமிருந்து மீட்க வேண்டும்.இவ்வாறு, அந்த புகாரில் அவர் கூறியிருந்தார்.





இது தொடர்பாக, கராச்சி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, விஜயகுமாரின் மகளை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். இதையடுத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை, அந்த பெண்ணை, கராச்சியில் உள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கும்படி, நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜன-202015:18:53 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மைனர் பெண்ணை கடத்தியவர்களை கைதுசெய்து வழக்கு போடாமல் , தீர்வு ஏற்படும்வரை பெண்ணை மட்டும் காப்பகத்தில் தங்க வைக்கிறார்களாம். இதுதான் இஸ்லாமிய மத நாட்டின் அருமையான நீதி.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
24-ஜன-202014:13:19 IST Report Abuse
oce சினிமா நடிகை நடிகர்களுக்கு உயர்தர வாழ்கைக தேவை படுகிறது. முகமதிய மாற்றத்திற்கு அரேபிய பெட்ரோல் பணத்தை மூட்டை கட்டி வைத்து அவர்களுக்கு வலை விரித்து வைத்துள்ளனர். இது போதாதென்று பாகிஸ்தானிலும் ஏமாந்த இந்து பெண்களாக பார்த்து மத மாற்றம் செய்கிறார்கள். முஸ்லீம் மதமாற்றத்திற்கு அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் பலியாகிறார்கள். இந்தியாவில் இந்த சிறுபான்மையினரால் பெரும்பான்மை மக்களும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். தமிழர் வாழ்ந்த அன்றைய சிந்து சமவெளியே இன்று பாகிஸ்தானுக்குள் சிந்து மாகாணமாக உள்ளது. முதலில் அதை பாரத பிரதமர் மோடிஜி அவர்கள் இந்தியாவுக்குள் கொண்டு வர வேண்டும். சுதந்திரம் வாங்கியபோதே அன்றைய சொக்கா காங்கிரஸ்காரன் இந்திய எல்லைகைள சரியாக பிரித்து இந்தியாவுடன் சேர்த்திருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
N.G.RAMAN - MADURAI,இந்தியா
24-ஜன-202013:37:52 IST Report Abuse
N.G.RAMAN பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் இந்தியாவில் குடியேற அனுமதி வழங்க வேண்டும். இவர்களை போன்ற அப்பாவி மக்களை பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற மதவாததுக்கு துணை போகும் அரசுகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். இது நியாயமான ஒன்று. இந்திய குடியுரிமை சட்டம் இதைத்தான் வலியுறுத்திக்கிறது. இந்த கொடுஞ்செயலை செய்த நபர் நானும் பாதிக்கப்பட்டவன்தான் என்று கூறி கொண்டு இந்தியா வந்தால் அந்த நபருக்கும் குடியுரிமை தரவேண்டும் என்று இங்குள்ள சில அமைப்புகள் நியாயமற்ற போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்திய குடியுரிமை சட்டத்தின் அவசியத்தை இந்த சம்பவம் நன்கு உணர்த்துகிறது. இந்த நிகழ்ச்சியை சுட்டி காட்டி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X