சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் உயிர் பெறுகிறதா 'அல்- உம்மா?

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (59)
Advertisement
Al_Ummah,TN,Tamilnadu,அல்_உம்மா,தமிழகம்,தமிழ்நாடு

சென்னை: 'சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக் கொல்லப்ட்ட வழக்கில், பெங்களூரில் கைது செய்யப்பட்ட மெகபூப் பாஷா, 'அல் - உம்மா' இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், அந்த இயக்கத்துக்கு மீண்டும் உயிரூட்டும் முயற்சியாகவே, சதி வேலைகளுக்கு இவர் துணைபோனார் என்றும், போலீசார் கூறுகின்றனர்.

'அல் - உம்மா' இயக்கத்தின், கடந்த கால சதித்திட்டங்கள், மிகவும் பயங்கரமானவை. கோவையில், 1997 நவம்பர், 27ல், உக்கம் சாலை சந்திப்பில் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த, போக்குவரத்து காவலர் செல்வராஜ், போக்குவரத்து விதிகளை மீறி, பைக்கில் பயணித்த, ஒரு பிரிவு இளைஞர்கள் மூவரை தடுத்து எச்சரித்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞர்கள் உக்கடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு திரண்ட, 'அல் - உம்மா' நிர்வாகிகள், இளைஞர்களை விடுவிக்க முயன்று முடியாமல் திரும்பினர். அடுத்த சில நிமிடங்களில், பயங்கர ஆயுதங்களுடன் உக்கடம் சந்திப்புக்கு வந்த கும்பல், அங்கு பணியிலிருந்த காவலர் செல்வராஜை சரமாரியாக வெட்டிக் கொன்று தப்பியது; கோவை நகரெங்கும் மத கலவரம் வெடித்தது.


பயங்கர குண்டுவெடிப்பு:


பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டன; ஒரு பிரிவைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்துக்கு பழிதீர்க்கும் வகையில், அடுத்த ஆண்டு, அதாவது, 1998 பிப்., 14ல், கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அந்நாளில், ஆர்.எஸ்.புரத்தில் நடந்த, லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க கோவைக்கு வருகை தந்த, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை குறிவைத்து, தேசத்தையே உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு சதி அரங்கேறியது. மனித வெடிகுண்டு தாக்குதலும் நடந்தது. இதில், 57 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு, 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலை நிகழ்த்திய, 'அல்- உம்மா' இயக்கம், அப்போதைய, தி.மு.க., அரசால் தடை செய்யப்பட்டது.


ஜெயிலில் நிர்வாகிகள்:


அல் - உம்மா இயக்க நிறுவனர் பாஷா, பொதுச் செயலர் முகமது அன்சாரி உள்ளிட்ட நுாற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றம், பாஷா, முகமது அன்சாரி உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்தது; சிலர் விடுவிக்கப்பட்டனர்; பலர், தண்டனை காலம் முடிந்து வெளியே வந்து விட்டனர். ஆனாலும், இந்த குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் காவலர் செல்வராஜ் கொலை வழக்குகளின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைகள், உச்சநீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளன. மேற்கண்ட இரு சம்பவங்களுக்குப் பின், அல் - உம்மா இயக்கத்தின் செயல்பாடு, தமிழகத்தில் முற்றிலும் ஒடுக்கப்பட்டு விட்டதாகவே போலீசார் கருதி வந்தனர்.


மீண்டும் ஒரு கொலை:


இந்நிலையில், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையின் பின்னணியில், 'அல் - உம்மா' பெயர் அடிபடுவதை அறிந்து, உளவு போலீசார் உஷாரடைந்து, சந்தேக நபர்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, சமீபத்தில், கோவை நகரில் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, சப் - இன்ஸ்பெக்டர் ஒருவரை மிரட்டிய வழக்கில், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்க பட்டார். தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பிற்கு சவால் விடும் வகையில் வளர்ந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
24-ஜன-202016:23:33 IST Report Abuse
dandy ஒரு கிராமத்தில் 7 தமிழர்களும் 3 குல்லா குடும்பமும் வசித்தால் குல்லா வாய் மூடி இருப்பான் ...ஆனால் தமிழர்கள் 3 குடும்பம் குல்லா 7குடும்பம் என்றால் ..தமிழர்களை கிராமத்தை விட்டு எப்படியாவது துரத்தி விடுவான் குல்லாக்கள் மற்றைய நாடுகளில் சிறுபான்மை என்றால் உரிமை கேட்ப்பார்கள் ..ஆனால் தங்கள் பெரும்பான்மை என்றால் ...சிறுபான்மையை நசிக்க தொடங்குவார்கள் ....உதாரணம் பாக்கிஸ்தான் ..பங்களாதேஷ் ...மலேஷியா ..எகிப்து ..லெபனான் ...சிரியா இன்னும் பல பல நாடுகள்
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
24-ஜன-202023:37:30 IST Report Abuse
Pannadai Pandianஉன்னை போட்டு நசுக்கி நாட்டை விட்டு துரத்தி விட்டுட்டான் சிங்களவன், அதுக்கு என்ன சொல்ற ??? மானம் கெட்ட நீ தமிழ்நாட்டை பத்தி கேவலமா பேசுற…….இந்த தமிழ்நாட்டுலயும் உன்னோட இனம் அகதியா தங்கி இருக்கு, எங்களுடைய நல்ல மனதால் உங்களை அரவணைத்து போகிறோம் என்பதை மறந்து விடாதே…....
Rate this:
Share this comment
Cancel
Magath - Chennai,இந்தியா
24-ஜன-202016:21:29 IST Report Abuse
Magath தேசத்தை பற்றி தேசியத்தை பற்றி தமிழ்நாட்டை பற்றி சுடலைக்கோ , சுடலை சார்ந்த ஓசிமணி, சைக்கோ, பாவாடை அடிமை குருமா, தகரமுத்து இவர்களுக்கு கவலை இல்லை. காலைல தூங்கி எழுந்தமா நாலு இட்லிய சாப்பிட்டு விட்டு வெள்ளை வேஷ்டி சட்டை போட்டமா, ஏதாவது பிரச்சனை பண்ணமா, கல்லா கட்னமா , வீட்டுக்கு வந்தமா, சாப்டமா, படுத்தமா அன்னிக்கு சோலி முடிஞ்சுதா அவ்ளோதான். அடுத்த நாள் சோத்துக்கு வழியில்லாதவன் குடும்பத்தில் இருக்கும் கஷ்டம் பற்றி இவர்களுக்கு என்ன கவலை. ஊரை ஏமாற்றி தமிழக மக்களை மதுவிற்கு அடிமையாக்கி தாய்மார்களின் கண்ணீரில் சம்பாதித்த பணத்தில் சகல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் ஒருநாள் காலத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
24-ஜன-202016:18:56 IST Report Abuse
dandy பண்டைய தமிழ் மன்னர்கள் ..இன்னும் 1000 ஆண்டுகளில் தமிழன் எப்படி இருக்கவேண்டும் என்று சிந்திக்காமல் விடத்தான் விளைவு தான் இன்று தமிழன் கேவலப்படுவது அன்று மன்னர்கள் வென்ற நாடுகளில் தமிழர்களை குடியேற்றி இருந்தால் இன்று ஆசியாவில் பல தமிழ் அரசுகள் இருந்து இருக்கும் ..இதே வேலையை இன்றைய திராவிட விஷங்கள் செய்கின்றன ..சொந்த லாபத்திற்கு ...ஒடடக மார்க்கத்திற்கு பல்லக்கு ..தூக்கினால். இன்னும் சில நூற்றாண்டுகளில் டாஸ்மாக் நாட்டில் எல்லோரும் குல்லாய் அணிந்து கூவ வேண்டி வரும் அல்லது இடம்பெயர வேண்டிவரும் ...மீண்டும் அன்றைய மன்னர்கள் விடட தவறை விட வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X