பொது செய்தி

இந்தியா

தை அமாவாசை: புனித நீராட குவிந்த பக்தர்கள்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (7)
Advertisement
amavasai, holy dip, தை அமாவாசை,புனித நீராடல்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : இன்று (ஜன.,24) தை அமாவாசையை முன்னிட்டு நதிகள் மற்றும் கடலில் ஏராளமான மக்கள் புனித நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்தனர்.


தை அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் கோபாலசமுத்திரம் கரையில் ஏராளமானோர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தை அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் கோபாலசமுத்திரம் கரையில் ஏராளமானோர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.தென்னகத்தின் காசி என அழைக்கப்படும் ஈரோடு, பவானி கூடுதுறையில் தை அமாவாசையையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மக்கள் புனித நீராடி, தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பிண்டங்களை ஆற்றில் கரைத்து வழிபட்டனர். பின்னர், சங்கமேஸ்வரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.


தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை மகாலிங்கம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். ஈரோடு பவானி கூடுதுறையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கும் தர்பணம் அளித்து, வழிபட்டு வருகின்றனர்.


தைஅமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் புனிதநீராடிய பக்தர்கள்.

தைஅமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் புனிதநீராடிய பக்தர்கள்.
உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் பாலாறு, திண்டுக்கல் கோபாலசமுத்திரம் கரை, சென்னை, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் குளக்கரை, புதுச்சேரி கடற்கரையில் ஏராளமானோர், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


தை அமாவாசையை முன்னிட்டு சென்னை, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்ட உறவினர்கள்.

தை அமாவாசையை முன்னிட்டு சென்னை, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்ட உறவினர்கள்.

உ.பி.,யில் புகழ்பெற்ற வாரணாசியில் மவுனி அமாவாசையை முன்னிட்டு கங்கை நதியில் ஏராளமானவர்கள் புனித நீராடி, வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
24-ஜன-202020:39:16 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy Where are those who ate Biriyani during Solar eclipse. I think neither do any thing for their fathers nor their sons will do for them
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-ஜன-202015:25:06 IST Report Abuse
ஆரூர் ரங் ஆண்டுக்காண்டு கூட்டம் அதிகரிக்கிறது . இது சொரியார் மண்ணுமில்லை கடலுமில்லை
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி பாவம் ஆப்புக்கு அதிக வேலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X