பொது செய்தி

தமிழ்நாடு

குரூப் 4 முறைகேடு : 99 தேர்வர்கள் தகுதிநீக்கம்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (22)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்த விவகாரத்தில் 99 தேர்வாளர்களை தகுதிநீக்கம் செய்வதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.





டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து டிஎன்பிஎஸ்சி விசாரணையை தீவிரப்படுத்தியது. இதில் குறிப்பிட்ட 2 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. முறைகேடு செய்து, கூடுதல் மதிப்பெண் பெற்றதாக 99 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. முறைகேட்டில் ஈடுபட்டவர்களில் 39 பேர் 100 இடங்களுக்குள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.





தேர்வில் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதிநீக்கம் செய்வதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தரவரிசைப்பட்டியலில் வந்துள்ள 39 பேருக்கு பதிலாக, தகுதியான வேறு 39 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய இரு மையங்கள் தவிர மற்ற எந்த மையத்திலும் முறைகேடு நடக்கவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான தேர்வாளர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. முறைகேடு செய்த 99 தேர்வாளர்கள், இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
25-ஜன-202006:16:59 IST Report Abuse
Raja இந்த பிரச்னைக்கும் மோடிய குறை சொல்றதுக்கு ஒரு கூட்டம் இருக்கு. இனிமேல் இடஒதுக்கீடு கிடையாதுன்னு அறிவிக்கணும். எல்லா மக்களும் சமம். வேலைவாய்ப்பு திறமை தகுதிய வச்சுதான்னு மாததணும். கட்டமரம் முக்கால்பாய்ஸ்களை பிற்படுத்தபட்ட முஸ்லிம்னு இடஒதுக்கீடு கொடுத்து அறிவில்லாதவனுகளுக்கெல்லாம் வேலை கொடுத்திட்டானுக.
Rate this:
Share this comment
Cancel
24-ஜன-202018:18:12 IST Report Abuse
இனியவன் பாஜக ஆட்சிக்கு வரும் முன்னரே வடநாட்டவனுக்கு தமிழக அரசு வேலை உறுதி செய்யப்படுகிறது. வந்தால் நம் நிலைமை என்ன?. Tnpsc தேர்விற்கு கண்மூடித்தனமாக மையங்களில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், கொஞ்சம் உங்கள் அரசை எதிர்த்து கேள்வி கேளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-ஜன-202014:49:15 IST Report Abuse
Natarajan Ramanathan நக்கீரன் - திருநெல்வேலி...உங்கள் ஆதங்கம் புரிகிறது. திராவிஷ கட்சிகள் இருக்கும்வரை இந்த அவலங்களும் இருக்கும். இதில் மத்திய அரசு தலையிட முடியாது. இவர்களை அடியோடு ஒழித்து நேர்மையான அரசை தேர்ந்தெடுக்க வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X