3000 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் பேசுகிறார்: மம்மிக்கு குரல் கொடுத்த ஆய்வாளர்கள்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (14)
Advertisement

இந்த செய்தியை கேட்க

கெய்ரோ : 3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எகிப்திய மதகுருவின் மம்மிக்கு, ஆய்வாளர்கள் குரல் வளையை உருவாக்கியுள்ளனர்.


எகிப்தில், கி.மு., 1099 - 1069 காலகட்டத்தில் வாழ்ந்த நெஸ்யமன் என்ற மதகுருவின் மம்மியை, தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மதகுரு என்பதால், பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட மதச்சடங்குகளை அவர் செய்திருப்பார். இதனால், அவரது குரல் வலிமையானதாக இருந்திருக்கும் என மானுடவியல் ஆய்வாளர்கள் கருதினர். இதையடுத்து அவரின் குரலை, செயற்கைக் குரல் வளையங்களைக் கொண்டு உருவாக்க மருத்துவர்கள் குழு முயற்சி மேற்கொண்டது.

அதன்படி, நெஸ்யமன்னின் பேச்சுக்குழல் ஸ்கேன் செய்யப்பட்டு, 3டி அமைப்பில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. செயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பைக் கொண்டு, மருத்துவர்கள் நெஸ்யமன்னின் குரலை தற்போது உருவாக்கியுள்ளனர். இது, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோல், ஐரோப்பாவில் உள்ள நீண்ட மலைத் தொடரான, ஆல்ப்ஸ் மலைத் தொடரில், 5,300 ஆண்டுகள் பழமையான மம்மி கிடைத்தது. அதை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், கடந்த ஆண்டு அதற்கு குரல் வளையை உருவாக்கினர். அதைப் பேசச் செய்தனர். அதன் பேச்சு, தமிழ் மொழியை ஒத்திருந்ததால் பரபரப்பாகப் பேசப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
27-ஜன-202010:10:51 IST Report Abuse
RajanRajan கட்டுமர குடும்பம் அந்த சமாதி போராளியை தட்டி எழுப்பீட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
24-ஜன-202021:36:41 IST Report Abuse
dandy இந்த technique மெரினாவில் கொண்டுவந்தால் தினமும் கட்டுமரம் முரசொலி படிப்பதை ..பார்க்க வரும் எருமைகள் கேட்டு ரசிக்கும்
Rate this:
Share this comment
Natarajan Dhanasekar - Bhopal,இந்தியா
27-ஜன-202014:35:28 IST Report Abuse
Natarajan Dhanasekarஒண்டவந்த பேய் ஊர் பேயை விர்ரட்டுது...
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
24-ஜன-202019:33:52 IST Report Abuse
Nathan நசிகேதஸும் யமனும் கேழ்வி பதிலில் மாபெரும் இறப்பு ரகசியங்களை விவாதித்துள்ளனர். நமக்காகவே விவாதித்துள்ளனர். அதுவே நசிகேதயமன் , என்றும் நசியமன் என மருவிய பெயராகவும் இருக்கலாம்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
24-ஜன-202020:55:07 IST Report Abuse
Nallavan Nallavanநீங்கள் அவர்களது உரையாடலைப் படித்துள்ளீர்கள் அல்லவா ? அது கூட ஒரு உபநிஷதம்தான் ..... வேதாந்தத்தை உள்ளடக்கியது ..... மற்றபடி நீங்கள் சொல்லியிருப்பது Fantasy ..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X