‛வைரஸ்' நகரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (8)
Advertisement

இந்த செய்தியை கேட்க

பீஜிங் : 25 உயிர்களை பலிகொண்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சீனாவின் வுஹான் நகரில் 25 இந்தியர்கள் சிக்கி உள்ளது தெரிய வந்துள்ளது.





இவர்களில் 5 பேர் மாணவர்கள் என்பதும், 20 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களை விமானம் மூலம் கன்மிங் விமான நிலையத்தில் இருந்து கோல்கத்தாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனாவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.





சீனாவில் வசிக்கும் இந்தியர்களின் வசதிக்காக +8618612083629 மற்றும் +8618612083617 என்ற 2 உதவி எண்களையும் இந்திய தூதரகம் அமைத்துள்ளது. இந்த எண்களில் தொடர்பு கொண்டு சீனாவில் இருக்கும் இந்தியர்கள், தாய்நாட்டிற்கு திரும்புவதானால் உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார மையத்துடன் தாங்கள் தொடர்பில் இருந்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. வுஹான் நகரில் இருப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என உத்தரவு இருப்பதால் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


குடியரசு தின விழா ரத்து:



இதற்கிடையில் வைரஸ் பாதிப்பால், முன்னெச்சரிக்கையாக சீனாவில் நடக்க இருந்த குடியரசு தின விழா ரத்து செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜன-202000:42:41 IST Report Abuse
Tamilan இப்போதாவது வெளிநாடு வாழ் இந்தியர்கள் அந்நாடுகளை குருட்டுத்தனமாக புகழ்ந்து தள்ளாடுவதுடன், அதையே இந்தியாவில் காப்பியடிக்கசொலவதையும், அதை வைத்து இந்தியர்களுக்கு உபதேசம் செய்வதையும் நிறுத்திக்கொள்ளவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா
24-ஜன-202015:38:29 IST Report Abuse
Vmmoorthy Moorthy நம்முடைய பாம்பாட்டி சித்தர்களை அனுப்பிவைக்கலாம். இன்னும் கொஞ்சகாலத்தில் காய்கறியில் வைரஸ் வரும்
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
24-ஜன-202011:54:08 IST Report Abuse
mindum vasantham சில திராவிடர்களை அங்கே அனுப்பி வைய்யுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X