சிறந்த மத்திய அமைச்சர் யார்; கருத்து கணிப்பில் தகவல்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (26)
Advertisement
BestPerforming, UnionMinister, AmitShah,  IndiaToday, MOTN, RajnathSingh, NitinGadkari, NirmalaSitharaman, PiyushGoyal, SmritiIrani, RaviShankarPrasad, RamVilasPaswan, GirirajSingh, NarendraSinghTomar, சிறந்தஅமைச்சர்கள், கருத்துகணிப்பு, அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, நிர்மலாசீதாராமன், அமைச்சர்கள், பியூஸ்கோயல்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: சிறப்பாக செயல்படும் அமைச்சர்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலிடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஆங்கில பத்திரிகையான இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் பைஆனுவல் மூட் ஆப் த நேஷன் இணைந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் சிறப்பாக செயல்படுபவர்கள் குறித்து கருத்துகணிப்பு நடத்தியது.

இதற்காக, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்தியம் என 5 மண்டலங்களின் வெவ்வேறு பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 மாநிலங்களில் 194 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய 97 பார்லி., தொகுதிகளில் கருத்துகணிப்பு மேற்கொள்ளப்பட்டது. 12,141 பேரிடம் நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டது.






இப்போதைய மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக, 42 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டது, குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுத்ததாக மக்கள் கூறுகின்றனர். இரண்டாவது, மூன்றாவது இடங்கள் முறையே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி உள்ளனர். இருவரும் தலா 39 சதவீத ஆதரவு பெற்றுள்ளனர்.




4 முதல் 10 இடங்களில் முறையே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (26 சதவீதம்), ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் (24), ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி (22), சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (16), உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் (15), விலங்குகள் பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் (15), வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திரசிங் தாமோர் (14) ஆகியோர் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
28-ஜன-202000:49:32 IST Report Abuse
Aarkay எங்க பப்பு???
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,இந்தியா
27-ஜன-202019:36:41 IST Report Abuse
Sundar AmidSha should take action in annexing Pak occupied Kashmir at the earliest so that we can curtail spending towards terrorists and military spending.
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27-ஜன-202017:43:36 IST Report Abuse
skv srinivasankrishnaveni இவ்ளோகேவலமா பிஜேபி யை தாக்கிய வாளுக்கு கோடி நன்றிகள் எண்னையா கான் கிரேஸ் லே என்ன பாலும் தேனும் அருவியாகொட்டியதா இல்லே மக்கள் எல்லாம் செல்வத்துலேபோரண்டங்களா உன்னுள்ளே ரெண்டுல 1947 லெந்து கொள்ளை அடிச்சுக்கோடீலே பொரண்டுண்டு இருக்கும் பசி சோனியா போல பிஜேபிலே ஏவாளும் கொள்ளை கொடியே அடிக்கல் ஏ அடிக்கலீங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X