அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்: திமுக முடிவு

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (63)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிப்.,2 முதல் 8 வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.






சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில், திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், குடியுரிமை சட்டம், என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.






பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், அனைத்து மக்களையும் பாதிக்கும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். என்ஆர்சி தயாரிக்கக்கூடிய எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது. என்பிஆர் தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். பிப்.,2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் நடத்தி, அதன் பிரதிகளை, நேரம் கிடைத்தால் ஜனாதிபதியை நேரில் சந்தித்து வழங்குவோம்.




ஒவ்வொரு மாவட்டம், நகரம், ஊராட்சி ஒன்றியங்களில் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்பார்கள். கட்சி சார்பற்றவர்கள், பொது மக்கள், மாணவர்கள், வணிகர்கள் ஆதரவு தர வேண்டும். குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற முடியாது என அமித்ஷா தெரிவித்திருந்தாலும், நாங்கள் தொடர்ந்து எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
25-ஜன-202021:26:19 IST Report Abuse
oce கையெழுத்து போடுபவனெல்லாம் கறை வேட்டியா. கட்சி உறுப்பினர்களா. கைநாட்டுகளை கணக்கில் எடுப்பீர்களா. திமுக மேல்மட்டத்தினர் தனியாக கையெழுத்து போட்டு மற்ற கையெழுத்துகளுடன் சேர்த்து கொண்டு போய் கொடுப்பார்களா. பிழைப்பற்ற வேலை. இதை விட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாம்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
25-ஜன-202021:18:42 IST Report Abuse
oce சொம்பை கொடுப்பது போல் கொடுத்து அண்டாவுடன் சேர்த்து எடுப்பவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
25-ஜன-202021:16:12 IST Report Abuse
oce விஷயத்தை எழுதி போடும் கையெழுத்தா இல்ல வெறும் பேப்பர் கையெழுத்தா. கையெழுத்து போடுபவர்கள் கையெழுத்துடன் ஆதார் எண்ணை குறிப்பிடுவார்களா. . இதெல்லாம் தேவை இல்லாத பழங்கால செல்லரித்த பயமுறுத்தல்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X