பொது செய்தி

இந்தியா

சனிப்பெயர்ச்சி எப்போது?: பொதுமக்கள் குழப்பம்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (26)
Advertisement
காரைக்கால், சனிப்பெயர்ச்சி, குச்சனூர்,

காரைக்கால்: திருக்கணித பஞ்சாங்கம் படி இன்று (24.1.2020) சனிப்பெயர்ச்சி எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் படி வருகிற 27.12.2020ல் தான் சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது என்றும், வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்றும் திருநள்ளாறு சனி பகவான் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இம்மாதம் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி நடைபெறுவதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இதனால் நேற்று கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் சனிப்பெயர்ச்சி விழா குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாக்கள் அனைத்தும் அசல் சுத்த வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படியே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த சனிப்பெயர்ச்சி (19.12.2017) மார்கழி மாதம் 4ம் நாள் செவ்வாய் காலை 10.01 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகும் நிகழ்வு நடைபெற்றது.

இவ்வாண்டு சனிப்பெயர்ச்சி விழா வரும் சுபமங்கள சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (27.12.2020) அதிகாலை 5.22 மணிக்கு நிகழவுள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். எனவே பக்தர்கள் தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


குச்சனூர்


தேனி, குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில், இன்று சனிப்பெயர்ச்சி விழா நடக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. பக்தர்கள், கோயில் நிர்வாகத்தையும், அர்ச்சகர்களையும் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதையடுத்து, 'டிச.,27 ல் தான் சனிப்பெயர்ச்சி விழா' என கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


கோயில் உதவி அர்ச்சகர் சிவக்குமார் கூறுகையில், '' திருக்கணித பஞ்சாங்க முறையில், ஜன.24ல் சனிப்பெயர்ச்சி எனக்கூறுகின்றனர். வாக்கிய பஞ்சாங்க முறையி்ல், டிச.,27 ஞாயிறு அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு, சனிபகவான் பெயர்ச்சியாகிறார். அன்றுதான் கோயில்களில் சனிப்பெயர்ச்சி விழா நடக்கும'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
24-ஜன-202021:00:27 IST Report Abuse
S.Baliah Seer அது வாக்கிய பஞ்சாங்கமோ அல்லது திருக்கணித பஞ்சங்கமோ எதுவாய் இருந்தால் என்ன?சனி இடப்பெயர்ச்சி அதனால் வரும் விளைவுகள் குறிப்பாக மனிதனுக்கு என்பதெல்லாம் பொய்யானவை. இயற்கை விளைவுகள் எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானவை.அவை தனி மனிதனுக்கோ அல்லது குறிப்பிட்ட இடத்திலுள்ள மனிதர்களுக்கு மட்டுமே விளைவுகளை உண்டாக்குவதில்லை.மனித மூளையே SUPREME FORCE TO DECIDE HIS /HER FATE . So self belief is the best belief .
Rate this:
Share this comment
Cancel
வேல்முருகன், தூத்துக்குடி அனைவருக்கும் சனி பகவானின் அருள் கிட்டைக்கட்டும். மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமையும்.
Rate this:
Share this comment
Cancel
24-ஜன-202018:50:10 IST Report Abuse
PATCHIAPPAN THANGAVELU முதல்ல ஜனவரி யா டிசம்பர் ஆணு ஒழுங்கா போடுங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X