இந்தியா-பாக்., டுவீட் : பா.ஜ., - ஆம்ஆத்மி இடையே மோதல்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (4)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : பா.ஜ., தலைவர் கபில் மிஸ்ரா, டில்லி சட்டசபை தேர்தலை இந்தியா-பாக்., மோதல் என குறிப்பிட்டு பதிவிட்ட டுவீட்டால் பா.ஜ., - ஆம்ஆத்மி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.






முன்னாள் ஆம்ஆத்மி எம்எல்ஏ.,வான கபில் மிஸ்ரா, அக்கட்சியில் இருந்து விலகி தற்போது பா.ஜ.,வில் இருந்து வருகிறார். இவர் டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். இவர், பிப்.,8 ம் தேதி நடக்கும் டில்லி தேர்தல் இந்தியா - பாக்., இடையேயான மோதல் என டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தொடர்பாக விளக்கம் கேட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் கபில் மிஸ்ராவுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதற்கிடையில், கபில் மிஸ்ராவின் டுவீட் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம்ஆத்மி எம்.பி.,யும், தேசிய செய்தி தொடர்பாளருமான சஞ்சய் சிங், பா.ஜ.,வின் மாடல் டவுன் வேட்பாளர் பிசிசிஐ.,யில் சேர்ந்து விட்டாரா என கிண்டல் செய்துள்ளார்.




இதற்கு பதிலளித்து கபில் மிஸ்ரா மீண்டும் ஒரு டுவீட் செய்துள்ளார். அதில், காங்.,ம் ஆம்ஆத்மி.,யும் நாட்டில் ஷாகீன் பாக் போன்ற சிறு பாக்.,களை உருவாக்கி வருகின்றன. இதை குறிப்பிடவே தான் இந்தியா-பாக்., மோதல் என தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மிக நெருக்கமானவராக இருந்த கபில் மிஸ்ரா, உட்கட்சி பூசல் காரணமாக கெஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். ஆம்ஆத்மி.,யில் இருந்து விலகிய பிறகும் கெஜ்ரிவாலை தாக்கி, பல முறை கருத்து தெரிவித்துள்ளார். கபில் மிஸ்ராவின் வேட்புமனுவை தள்ளுபடி செய்யும் படி தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆம்ஆத்மி வலியுறுத்தியது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-ஜன-202011:10:28 IST Report Abuse
Malick Raja பாகிஸ்தானை பற்றி பேசினால் மட்டுமே பிஜேபி இந்தியாவில் வாழமுடியும் என்பது மட்டும் உண்மை .. அதனால்தானோ பாகிஸ்தானிடம் போரிடாமல் இருக்கிறார்களோ ? பாகிஸ்தானை வைத்து பிழைப்புநடத்தும் கட்சி பிஜேபி என்பதும் உண்மை ..
Rate this:
Share this comment
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
25-ஜன-202005:52:02 IST Report Abuse
Raja கேசரிவால் என்னென்ன அயோக்கியதனம் பண்றார்னு இவருக்குதான் தெரியும். கேசரிவால் ஒரு தேசதுரோகி. நக்சலைட். இவன மக்கள் நம்பி பதவில உக்காரவச்சுட்டாங்க. ஆரம்பத்துல துள்ளின மாதிரி இப்ப துள்றர விட்டுட்டான். ஸ்டண்ட் மாஸ்டர்.
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
24-ஜன-202018:15:55 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை அப்படின்னா ஜெயிக்கிறவங்கதான் இந்தியாவின் உண்மையான விசுவாசிகள்ன்னு உரக்க சொல்லுங்க பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X