சீன முஸ்லிம்கள் பற்றி தெரியாது: இம்ரான் 'பல்டி'

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (41)
Advertisement
ImranKhan, Pakistan, UighurMuslim, China, இம்ரான்கான், இம்ரான், பாகிஸ்தான், உய்குர், முஸ்லிம், சீனா,

போன்: சீனாவில் துன்புறுத்தப்படும் உய்குர் முஸ்லிம்கள் பற்றி தெரியாது எனவும், கடினமான சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு சீனா உதவியது என்றும் பாக்., பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்த போது, பாக்., பிரதமர் இம்ரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தன்னை காஷ்மீர் மக்களின் தூதர் என்றும் கூறிக்கொண்டார். அதேபோல் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியதால், இங்குள்ள முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதாக கருத்து தெரிவித்து வந்தார்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மீது அக்கறை இருப்பது போலவும், அவர்களுக்காக குரல் கொடுப்பது போலவும் பாசாங்கு செய்து வந்தார். இதற்கிடையே சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.




இது தொடர்பாக இம்ரானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறியதாவது: சீனாவில் முஸ்லீம்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அது பற்றி எப்போதோ படித்துள்ளேன். ஆனால், காஷ்மீரில் நடப்பதை ஒப்பிடும் போது அதெல்லாம் ஒன்றுமில்லை.
சீனா, பாகிஸ்தானின் நல்ல நண்பன். எங்களது கடினமான சூழ்நிலைகளில் சீனா எங்களுக்கு உதவியுள்ளது. சீனாவுடன் எங்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் தீர்த்துக்கொள்வோம்; பொதுவெளியில் சொல்ல மாட்டோம். இவ்வாறு இம்ரான் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-ஜன-202017:43:35 IST Report Abuse
J.V. Iyer பாக்கி நாடு பற்றி எரிகிறது. அதைப்பற்றி கவலை இல்லை இந்த பாக்கி பிரதமருக்கு. காஷ்மீர் பற்றி கனவு காண வந்துவிட்டார்.
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
25-ஜன-202011:49:47 IST Report Abuse
suresh kumar அது சரி, உங்கள் நாட்டில் உள்ள அஹமதியா முஸ்லிம்களை பற்றியாவது உங்களுக்கு தெரியுமா?
Rate this:
Share this comment
Cancel
King of kindness - muscat,ஓமன்
25-ஜன-202009:25:47 IST Report Abuse
King of kindness என்கிட்ட இந்தியாமுஸ்லிம பத்தி மட்டும் கேளுங்க - வேற நாட்டு முஸ்லிம பத்தி இந்தியா கிட்ட தான் நீங்க கேட்கணும். மத்த நாட்டு முஸ்லீம் எக்கக்கேடு கெட்டாலும் எனக்கு கவலையில்லை - ஏனென்றால் நான் பாக் பச்சை முஸ்லீம். இம்ரான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X