கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (67)
Advertisement
rajinikanth, rajini, chennaihighcourt, highcourt, ரஜினி, ரஜினிகாந்த், சென்னைஐகோர்ட், ஐகோர்ட், உயர்நீதிமன்றம், சென்னைஉயர்நீதிமன்றம்

இந்த செய்தியை கேட்க

சென்னை: ஈ.வெ.ரா., குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை திராவிடர் விடுதலை கழகம் வாபஸ் பெற்றது. இதனால், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

'துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினி, 1971ல் சேலத்தில் நடந்த ஈ.வெ.ரா., நடத்திய பேரணி குறித்து பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிலர் வலியுறுத்தினர். ஆனால், மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி தெரிவித்துவிட்டார். இந்நிலையில், ஈ.வெ.ரா., குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் உமாபதி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று(ஜன.,24) நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் வாதாடும் போது, பத்திரிகை செய்திகளை அடிப்படையாக வைத்து ஈ.வெ.ரா., குறித்து கருத்து தெரிவித்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். எப்படி இருந்தாலும், புகாரை வைத்து சட்ட விதிகளை பின்பற்றி முடிவெடுக்கப்படும்'' என்றார்.

இதனையடுத்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், '' ரஜினிகாந்த் அரசியலில் ஆதாயம் அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஈ.வெ.ரா., பெயருக்கு களங்கம் ஏற்படுத்த அவ்வாறு பேசியதாக'' தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதி ராஜமாணிக்கம், ''ரஜினிகாந்த் மீது போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்து 15 நாட்கள் முடிவதற்குள்ளாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்? புகாரின் மீது விசாரணை நடத்த போலீஸ்துறைக்கு அவகாசம் அளிக்காமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் நீதிமன்றம் செயல்பட முடியும் . புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்த கால அவகாசம் வழங்கி அதில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்'' என்றார்.

இதனை ஏற்று கொண்ட திராவிடர் விடுதலை கழக தரப்பினர், மனுக்களை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர். இதை ஏற்று, மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜன-202003:15:30 IST Report Abuse
இந்தியன்... விவசாயி மகன் ஆப்பசைத்த குரங்கு கதையாகி விட்டது இன்று ஈ.வெ.ரா யிஸ்டுக்கள் நிலை. வாயமூடிட்டு சும்மா இருந்திருந்தால் இந்த அநாகரிகமான விஷயங்கள் வெளியே வந்திருக்காது.பெரியார் பற்றி எம்.ஜி.ஆர் நினைத்ததை செய்யத் துணிந்து உருவாகிறார் ஒரு மாஸ் லீடர் அலறும் ஒட்டுமொத்த ஈ.வெ.ரா யிஸ்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
ராமதாசன் - chennai,இந்தியா
25-ஜன-202002:40:39 IST Report Abuse
ராமதாசன் அது ஒன்னும் இல்லீங்கோ .. ரஜினி 'துக்ளக்' மட்டும் செய்தி வெளியிட்டது என்று சொன்னார் - எங்கள் விடுதலை நாளிதழ் பற்றி சொல்ல வில்லை யுவர் honor - அதுனால அவர் மேல் நடவடிக்கை எடுங்க
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
24-ஜன-202021:14:17 IST Report Abuse
Allah Daniel சொரியார் பத்தி எவ்வளவு அசிங்கமா வேணும்னாலும் பேசலாம்...சொந்த மகளையே கல்யாணம் செஞ்ச, கேடு கெட மனுஷன் இந்த சொரியார்....
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - TMILNADU ,இந்தியா
24-ஜன-202021:25:27 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு மனைவி :::: எங்க துக்ளக் பெரிய பத்திரிகையோ :::: கணவன் :::::: பின்ன ....? த்தந்திக்கு ஈகுவாலா வடை பஜ்ஜி போண்டா எண்ணையை உறுஞ்சுகிற பேப்பர் துக்ளக் தாண்டி :::: இது தான் துக்ளக்...
Rate this:
Share this comment
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
25-ஜன-202001:23:00 IST Report Abuse
Rasu Kutty@வெற்றிகொடிக்கட்டு : அரைச்ச மாவையே திரும்ப திரும்ப..... புதுசா ஏதாவது சுயமா கருத்து போடு.......
Rate this:
Share this comment
ராமதாசன் - chennai,இந்தியா
25-ஜன-202002:42:06 IST Report Abuse
ராமதாசன் அப்போ விடுதலை / முரசொலி - கலர் கட்ச் ஆகும் துண்டு போட்டவருக்கு...
Rate this:
Share this comment
ராமதாசன் - chennai,இந்தியா
25-ஜன-202002:43:03 IST Report Abuse
ராமதாசன் அப்போ விடுதலை - அதுக்கு கூட உதவாது...
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
25-ஜன-202003:50:56 IST Report Abuse
uthappaகரெக்ட்டா சொல்லிடீங்க, நீங்க அந்த பத்திரிக்கையை உங்க வாழக்கையில் வாங்கியதே இல்லை, ஆனால் தெருவோர கடை பஜ்ஜி வாங்கி வயிற்றை கழுவும் சாதாரன ஆள் என்று புரியும்படி சொல்லிடீங்க.எவ்வளவு பொறுமை இருந்தா நாளிதழ் தவிர்த்து , புத்தகத்தை வாங்கி நீங்க பக்கம் பக்கமா கிழித்து எண்ணெய் எடுப்பீங்க....
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
25-ஜன-202015:42:56 IST Report Abuse
Chowkidar NandaIndiaவிடுதலை பத்திரிக்கை இன்னுமா வெளிவருகிறது? ரூபாய்க்கு மூணா நாலா? ஹா ஹா ஹா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X