இம்ரானுடன் ராகுல், கெஜ்ரிக்கு தொடர்பு? அமித்ஷா சந்தேகம்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (21)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: காங்., முன்னாள் தலைவர் ராகுல், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வெளியிடும் அறிக்கைகள் பாக்., பிரதமர் இம்ரான்கானின் அறிக்கையுடன் ஒத்துப்போயுள்ளது என்றும், இதனால் தொடர்பு இருப்பதாக நினைக்கிறேன் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.





டில்லியில் மொத்தமுள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் பிப்.,08 ம் தேதி நடக்கிறது. இதற்காக ஆளும்கட்சியான ஆம்ஆத்மி, பாஜ., மற்றும் காங்., கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு டில்லியில் உள்ள மட்டியாலா பகுதியில் பாஜ., வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் பேசியதாவது: பல முறை ராகுல், கெஜ்ரிவால் அறிக்கை வெளியிடுகின்றனர். உடனடியாக பாக்., பிரதமர் இம்ரானும் அறிக்கை வெளியிடுகிறார். நீங்கள் யூடியூப் தளத்தில் அவர்களின் அறிக்கைகளை பார்த்தால், அதில் ஒற்றுமை இருப்பதை காணலாம்.




இவர்களுக்குள் என்ன தொடர்பு இருக்கிறது என இப்போதும் நினைக்கிறேன். ராகுல், கெஜ்ரிவால் என்ன சொல்கிறார்களோ, அதையே இம்ரானும் சொல்கிறார். இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், டில்லி பாதுகாப்பாய் இருக்காது. கலவரங்களை விரும்புபவர்கள் அதிகாரத்திற்கு வர உரிமை இல்லை. நாட்டில் தவறான வாக்குறுதிகள் அளிப்பதில் போட்டி வைத்தால், கெஜ்ரிவால் முதல் பரிசை பெறுவார். நீங்கள் (ஆம்ஆத்மி) அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டீர்கள்; அதை நினைவூட்ட தான் இங்கு வந்துள்ளேன். மோடி போன்ற அரசு அமையவேண்டுமா அல்லது தொடர்ந்து போராட்டங்களை நடத்துபவர்கள் வேண்டுமா என மக்கள் அளிக்கும் ஓட்டுகளே தீர்மானிக்க இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
25-ஜன-202003:30:31 IST Report Abuse
Anandan அட டில்லி தேர்தல் இருக்கு அல்லவா? அதான் இந்த பேச்சு. நேர்மை என்பதே கொஞ்சமும் இல்லாத கூட்டம்.
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
24-ஜன-202021:22:17 IST Report Abuse
Rajagopal நம்ம சொடலைய மறந்து போட்டாரு பாருங்க. தமிழனுங்கண்ணா எவனும் கண்டுக்கிடறது இல்ல. நம்ம சொடலைதான் டெல்லியில போயி CAA -வ எதிர்த்துப் போராட்டம் நடத்தினாரு. கேஜ்ரிவாலு அங்கிட்டு இருந்துக்கிட்டே ஏதாவது செஞ்சாரா? டெல்லி எம்மாந்தூரம்? சென்னையிலேந்து கெளம்பி, வேட்டிய கட்டிக்கிட்டு, குளிருல நின்னுக்கிட்டு நம்ம சொடலை ஐயாக் கூக்குரலு குடுத்தாரு. அத பாகிஸ்தானுல இம்ரான் பாயி சொல்லல? இவ்வவளவு செஞ்சப்புறமும் அமித் ஷா நம்ம சொடலைய ஓரங்காட்டிப்புட்டு ராவுலு, கேஜ்ரிவாலு இந்தப் பயலுகள புடிச்சிக்கிட்டுத் தொங்குதாரு. அதான் நம்ம அண்ணா நமக்குத் தனி நாடு வேணும்னு கேட்டாரு.
Rate this:
Share this comment
Cancel
murali - Chennai,இந்தியா
24-ஜன-202020:25:16 IST Report Abuse
murali ராகுல் அண்ட் போர்ஜெரி பயங்கரமான ஆளுங்கோ. நாட்டை காட்டிக்குடுத்து துட்டு சம்பாதிபனுகோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X