கண்டதைத் தின்றதால் கரோனா வைரஸ்: காய்கறிக்குத் திரும்பும் சீனர்கள்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (30)
Advertisement

பீஜிங்: மனிதனைத் தவிர அனைத்து உயிர்களையும் கொன்று தின்றதால், உயிரைக் குடிக்கும் கரோனா வைரஸ் பாதிப்புக்குச் சீனர்கள் ஆளாகியுள்ளனர். இதனால், காய்கறிகள் உண்ண முடிவு செய்துள்ளனர்.

மனிதர்கள் இதுவரை கண்டிராத, 'கரோனா' வைரசால் பாதிக்கப்பட்டு, சீனாவில் இதுவரை, 25 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார், 850க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுஹான் நகரில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது. பின், பீஜிங், ஷாங்காய் போன்ற சீனாவின் மற்ற நகரங்களில் வசிப்பவர்களும் இதனால் பாதிக்கப்பட்டனர். சீனா வந்து சென்றவர்களால், அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியது.

கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை, 'சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவிக்க வேண்டாம்' என, முடிவு செய்துள்ள உலகச் சுகாதார மையம், 10 நாட்களுக்குள் இதுபற்றி மீண்டும் கூடி ஆலோசிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

'இந்நிலையில், 'கரோனா வைரஸ்' உருவான, சீனாவின் வுஹான் நகரின், 'ஹுனான் கடல் உணவு சந்தை'யில் அதிகாரிகளும் மருத்துவர்களும் ஆய்வு செய்தனர். சந்தையில் அறுக்கப்பட்ட, ஏதோ ஒரு வன விலங்கிடமிருந்தே, உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள, கொரோனா வைரஸ் பரவியுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, அந்தச் சந்தைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்துள்ளனர்.


121 வன உயிரிகள்அந்தச் சந்தையில் விதிமீறி உயிருடன் விற்கப்பட்ட வனவிலங்குகளின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில், 'நரி, ஓநாய், பாம்பு, முதலை, காட்டெலி, மயில், எறும்புத்தின்னி, ஒட்டகம், மான், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, முயல், காட்டுப்பூனை, கரடி, வவ்வால், உடும்பு' உள்ளிட்ட, 121 வன உயிரினங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 'ஆடு, மாடு, கோழி, பன்றி, முயல்' உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகளும்; 'கரப்பான், பல்லி, புழுக்கள்' உள்ளிட்ட, புழு, பூச்சி வகைகளும் அந்த சந்தையில் விற்கப்பட்டன. சந்தைக்கு, உயிருடன் கொண்டு வரப்படும் வன விலங்குகள், பல நாட்கள் அடைத்து வைத்து விற்கப்பட்டுள்ளன. அந்த விலங்குகளில் ஏதோ ஒன்றிலிருந்தே இந்த வைரஸ் பரவி இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே, கோழிகளிடம் இருந்து, 'எச்.என். ஏவியன் இன்புளூயன்சா' என்ற நோய்தொற்றும், எலிகளிடம் இருந்து, 'லெப்டோஸ் பைரோசிஸ்' என்னும் காய்ச்சலும், வெறிநாய்களிடமிருந்து 'ரேபிஸ்' என்னும் நோயும் தொற்றுகின்றன. சீனாவில் சமீபத்தில், 'சார்ஸ்' எனப்படும் சுவாசப் பாதிப்பை ஏற்படுத்திய வைரசும், வன விலங்குகளில் இருந்து பரவியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்போதும், பல வகை உயிரினங்களின் மாமிசங்களை உண்பதில் அலாதி பிரியம் கொண்டுள்ள சீனர்களுக்கு, மாமிசம் என்றாலே தற்போது பயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மாமிசத்தை உண்பதை நிறுத்திக் கொண்டு, மனித உடலுக்கு எந்தப் பாதிப்பையும் தராத காய்கறி மற்றும் கீரைகளை உண்ண முடிவு செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
27-ஜன-202016:31:40 IST Report Abuse
S.Ganesan வள்ளுவரை பற்றி பேசுவோர் அவர் புலால் மறுத்தல் பற்றி கூறியதை சௌகரியமாக மறந்து விட்டார்களே.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
25-ஜன-202009:00:16 IST Report Abuse
ரத்தினம் தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜன-202006:27:36 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஆடுமாடு பள்ளிக்கரப்பு கம்பளிப்பூச்சி தேள் என்று எதையும் விடாதுகள் இந்த சப்பைநொசேர்கள் (சப்பைமூக்கற்கள்)ஒரு முறை கொதிக்கும் என்னை கொண்டுவந்த சர்வர் மேஜைலெ வைக்க ஒரு நபர் தேள் கொத்திக்கும் என்னையே போட்டு பொரிச்சு துண்ணான் என்று நேரில்பார்த்தவர் கூறினார் கூறியவர் நாலுநாள் சாப்பிடவேமுடியாமல் தவிச்சார் என்றும் சொன்னார் அவ்ளோ அருவெறுப்பாக பீல் பண்ணாரு.
Rate this:
Share this comment
mei - கடற்கரை நகரம்,மயோட்
28-ஜன-202009:37:28 IST Report Abuse
meiதமிழை மொதல்ல நல்லா எழுத பழகுங்கம்மா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X