இந்திய அணிக்கு 204 ரன்கள் இலக்கு

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020
Share
Advertisement
cricket, India, newzealand

ஆக்லாந்து: முதல் 'டுவென்டி-20' கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 203 ரன்கள் குவித்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு 204 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆக்லாந்து, ஈடன் பார்க் மைதானத்தில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.இந்திய அணியில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜடேஜா, ஷர்துல் தாகூர், பும்ரா, சகால், முகமது ஷமி இடம் பெற்றனர். சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ரிஷாப் பன்டுக்கு இடம் கிடைக்கவில்லை.


latest tamil news


நியூசிலாந்து அணிக்கு கப்டில், மன்ரோ ஜோடி மின்னல் வேக துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்த போது, ஷிவம் துபே பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்ட கப்டில் (30), ரோகித்தின் 'சூப்பர்' கேட்சில் திரும்பினார். மன்ரோ, 36வது பந்தில் அரைசதம் எட்டினார். இது இவரது 10வது அரைசதம். இவர் 42 பந்தில் 59 ரன்கள் எடுத்த போது, ஷர்துல் தாகூரிடம் சரிந்தார். கிராண்ட்ஹோம் 'டக்' அவுட்டானார்.

பின் கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இணைந்து மின்னல் வேகத்தில் ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த வில்லியம்சன் (51) சகால் சுழலில் சிக்கினார். செய்பெர்ட் (1), பும்ரா 'வேகத்தில்' வீழ்ந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்தது. ராஸ் டெய்லர் (54), சான்ட்னர் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X