நித்தியானந்தாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி வழக்கு

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (5)
Advertisement

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.





ஆசிரமத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சாமியார் நித்தியானந்தா மீது கர்நாடக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் நித்தியானந்தா தவிர்த்து வந்தார். சமீப காலமாக அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.




இந்நிலையில் நித்தியானந்தாவிற்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் புதிதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலாவதியான பாஸ்போர்ட்டை வைத்து அவர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாகவும், அவர் தற்போது இந்தியாவில் தான் உள்ளாரா இல்லை என்பது பற்றி தெரியவில்லை எனவும், விசாரணைக்கு ஆஜராவதில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள விலக்கு தவறான முன்னுதாரணமாகி விடும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை இன்று விசாரித்த கர்நாடக ஐகோர்ட், இந்த மனு மீது கர்நாடக அரசும் நித்தியானந்தா தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வழக்கின் விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
24-ஜன-202022:16:14 IST Report Abuse
oce நித்யானந்தா ஒரு வேளை திருவண்ணாமலை குகை நமசிவாயரிடம் இருப்பாரோ.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜன-202016:32:36 IST Report Abuse
Tamilan நாட்டில் வேலை வெட்டி இல்லாதவர்கள் , நாச வேலைகளில் ஈடுபடுபவர்கள், மற்ற மத வாத பழமைவாதிகள், இனவாதிகள் ஆகியோருக்கு குறைவே இல்லை என்பது இதில் மட்டுமல்ல இந்திய அரசியல் சட்ட்ட கோர்ட்டுகளில் உள்ள பெரும்பாலான வழக்குகள் இவற்றைத்தான் உணர்த்துகின்றன. இந்திய அரசியல் சட்டம் என்பது உலகில் எங்குமே நடைமுறையில் வெற்றிபெற்ற ஒன்று என்று நிரூபிக்கப்படாத , அதை இயற்றிய ஒரு சிலரின் கற்பனை கதைகள் மற்றும் மக்களுக்கு விடும் மிரட்டல்கள்தான் . இதை வைத்துக்கொண்டு நாட்டையோ , நாட்டு மக்களையோ காக்க முடியாது . வளர்ச்சிப்பாதைக்கு இட்டு செல்லமுடியாது . அரசியல் சட்டமும் அரசியல் அமைப்பும் தேசவிரோகளின், பலதரப்பட்ட இனவாதிகளின், பிரிவினைவாதிகள் கையில் சிக்கி தவிக்கிறது .
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-ஜன-202016:18:19 IST Report Abuse
தமிழ்வேல் இவரது படங்கள் அனைத்தும் போட்டோ எடுத்துக்கொள்வதற்காகவே போஸ் கொடுப்பது போல உள்ளன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X