தூக்கை தள்ளிப் போட நிர்பயா குற்றவாளிகள் மீண்டும் முயற்சி

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (33)
Advertisement

புதுடில்லி: மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்தும் முயற்சியில் நிர்பயா குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர்.நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணிகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. குற்றவாளிகளின் கடைசி ஆசை குறித்து கேட்டும், அவர்கள் பதிலளிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். அதனால் கடைசியாக குழந்தைகள் உள்ளிட்ட உறவினர்களை பார்ப்பது போன்ற ஆசைகளை எழுத்துபூர்வமாக திகார் சிறை நிர்வாகம் கேட்டு வருகிறது. கோர்ட் உத்தரவுப்படி பிப்.,1 ம் தேதி காலை 6 மணிக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முந்தைய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தண்டனை நிறைவேற்றுவது தொடர்ந்து தாமதிக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசும், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ஆனால் தண்டனையை தாமதிக்கும் முயற்சியில் குற்றவாளிகள் 4 பேரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
4 பேரும் அடுத்தடுத்து சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் அளித்தும் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவனின் வழக்கறிஞரான ஏ.பி.சிங்., பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் இன்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், வினய் பவான் மற்றும் அக்ஷயின் சீராய்வு மற்றும் கருணை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த ஆவணங்களை திகார் சிறை நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை. அதனால் அந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் வெளியிடப்படும் வரை தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
25-ஜன-202007:28:43 IST Report Abuse
spr "தண்டனையை தாமதிக்கும் முயற்சியில் குற்றவாளிகள் 4 பேரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்." இது தவறான செய்தி அவர்கள் அனைவரும் பொது அறிவு கூட இல்லாதவர்கள். அவர்களுக்கு சட்ட விதிமுறைகள் சிறைச்சாலை விதிமுறைகள் இவையெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை சீராய்வு மற்றும் கருணை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த ஆவணங்களை திகார் சிறை நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை. அதனால் அந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் வெளியிடப்படும் வரை தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்குமளவிற்கு அவர்களுக்கு அறிவிருக்க வாய்ப்பில்லை குற்றவாளிகளில் ஒருவனின் வழக்கறிஞரான ஏ.பி.சிங்., போன்றோர் ஏதோ ஒரு மறைமுகமான நோக்கத்தில் நீதித்துறையையும் அரசையும் சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள் கொலைக்குற்றவாளிகளுக்கு இயல்பாக வழங்கப்படும் எந்தவித சலுகையும் இவர்களுக்குத் தருவதில் நியாயமில்லை இவர்கள் தூக்கிலிடப்படாவிடில், இந்த வழக்கு ஒருவேளை நம் தமிழக எழுவர் தீர்ப்பை தீர்மானிக்க, பயன்படுத்தப்படலாம் இவர்களோடு ஒப்பிடுகையில் அந்த எழுவர் செய்த குற்றம் சிறியதே எனவும் வாதாட இதனை ஒரு முன்னுதாரணமாக எடுக்க வாய்ப்பு உண்டு மொத்தத்தில், இது வழக்கறிஞர்கள் திட்டமிட்டு செய்யும் ஒரு சதி போலத் தோன்றுகிறது இது குறித்து விசாரணை தேவை அவர்களைத் தூக்கிலிடுவதனைவிட இது முக்கியம்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-ஜன-202006:02:52 IST Report Abuse
D.Ambujavalli இந்தப் பாவிகளிடம் கடைசி அரசை, கருமாதி ஆசை என்று கேட்டு, வேறு ஒரு பெண்ணைக் கொண்டுவாருங்கள் சாவதுதான் சாகிறோம், இன்னொரு முறையும் அதே குற்றத்தை அரங்கேற்றிவிட்டு சாகிறோம் என்றுகூடக் கேட்பார்கள்
Rate this:
Share this comment
Hari - chennai,இந்தியா
25-ஜன-202009:54:18 IST Report Abuse
Hariஇவர்களோடு வக்கீல் அந்த எ பி சிங் ஒரு வாரம் கூட இருந்து அவர்களின் ஆசையை நிறைவேற்ற சொல்லுங்கால்ம்கனம்கோர்ட்டார் அவர்களே....
Rate this:
Share this comment
Cancel
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
25-ஜன-202002:43:01 IST Report Abuse
babu Which scoundrel is advising them to do all these things , He/She should be hanged first , Why do the court or Jail authorities have to follow norms. All these norms are for not for Rapists and Murderers.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X