பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறினார் வாலிபர்: போக்குவரத்தை சரி செய்யும் தண்டனை

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020
Advertisement

திருச்சி: திருச்சியில், குடிபோதையில் பைக் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய வாலிபருக்கு, போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட வேண்டும் என நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதன்படி, அந்த வாலிபர், போலீசாருடன் சேர்ந்து போக்குவரத்தை சரி செய்தார்.






மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் 5 பேருடன் பயணம் செய்த, பாலமுருகன் என்ற இளைஞருக்கு, 2 நாள் போக்குவரத்தை சீர் செய்யும் படி, இளம் சிறார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி கே கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 19. இவர், கடந்த 2018ம் ஆண்டு சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் ஐந்து பேருடன் காட்டூர் பகுதியில் பைக்கில் சென்றுள்ளார். மது போதையில் பைக்கில் சென்ற போது, தவறி விழுந்து விபத்துக்குள்ளானதால் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விபத்து நடந்த போது, பைக்கை ஓட்டிச் சென்ற பாலமுருகனுக்கு, 17 வயது என்பதால், அவர்மீது வழக்கு தொடரப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். சிறார் நீதிக் குழும உறுப்பினர் சுமதி , வழக்கு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்தார்.





ஜே.எம். எண் - 6 நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஷகீலா முன்னிலையில் விசாரணை நடந்தது.வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஷகீலா, போக்குவரத்து விதிமுறைகளை மீறி, மது போதையில் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய பாலமுருகன், திருச்சி மாநகர பகுதியில், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ஜனவரி 24, 25ம் தேதிகளில், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தண்டனை பெற்ற வாலிபரை பணியில் ஈடுபடுத்தி, அதுபற்றிய அறிக்கையை போலீசார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.




அதன்படி, தண்டனை பெற்ற பாலமுருகன், திருச்சி எம்.ஜி.ஆர்.சிலை பகுதியில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X