இந்திய அணி கலக்கல் வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் அபாரம்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (1)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஆக்லாந்து: முதல் 'டுவென்டி-20' போட்டியில் ராகுல், ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.






நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆக்லாந்து, ஈடன் பார்க் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.இந்திய அணியில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜடேஜா, ஷர்துல் தாகூர், பும்ரா, சகால், முகமது ஷமி இடம் பெற்றனர். சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ரிஷாப் பன்டுக்கு இடம் கிடைக்கவில்லை.





நியூசிலாந்து அணிக்கு கப்டில், மன்ரோ ஜோடி மின்னல் வேக துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்த போது, ஷிவம் துபே பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்ட கப்டில் (30), ரோகித்தின் 'சூப்பர்' கேட்சில் திரும்பினார். மன்ரோ, 36வது பந்தில் அரைசதம் எட்டினார். இது இவரது 10வது அரைசதம். இவர் 42 பந்தில் 59 ரன்கள் எடுத்த போது, ஷர்துல் தாகூரிடம் சரிந்தார். கிராண்ட்ஹோம் 'டக்' அவுட்டானார்.




Advertisement


பின் கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இணைந்து மின்னல் வேகத்தில் ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த வில்லியம்சன் (51) சகால் சுழலில் சிக்கினார். செய்பெர்ட் (1), பும்ரா 'வேகத்தில்' வீழ்ந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்தது. ராஸ் டெய்லர் (54), சான்ட்னர் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.







ராகுல் கலக்கல்


கடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ரோகித் சர்மா 7 ரன்னுக்கு அவுட்டானார். லோகேஷ் ராகுலுடன் இணைந்தார் கோஹ்லி. டிக்னெர் பந்தில் கோஹ்லி சிக்சர் அடிக்க, மறுபக்கம் ராகுல், சவுத்தீ, சான்ட்னர் பந்துகளில் பவுண்டரி, சிக்சர் என விளாசினார். இவர் 23 வது பந்தில் அரைசதம் அடித்தார்.இந்திய அணி 9 ஓவரில் 107/1 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இதன் பின் திடீரென சொதப்பியது. ராகுல் (56), கோஹ்லி (45) சீரான இடைவெளியில் வெளியேறினர். சான்ட்னர் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஷிவம் துபே (13) நீடிக்கவில்லை.




ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே இணைந்து போராடினர். கடைசியில் ஸ்ரேயாஸ் ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.





இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி 26ம் தேதி நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-ஜன-202016:13:15 IST Report Abuse
இந்தியன் kumar நான்காவது இடத்துக்கு நல்ல ஒரு வீரர் கிடைத்துவிட்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X