டில்லி தேர்தல்: அமித்ஷா குற்றச்சாட்டுக்கு கெஜ்ரி பதிலடி

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தல் பிப்.,8 அன்று நடக்க உள்ள நிலையில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவாலுக்கும், மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா இடையே வார்த்தை மோதல் அதிகரித்துள்ளது. அமித்ஷா தெரிவித்த குற்றச்சாட்டு அனைத்திற்கும் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.நேற்று இரவு டுவிட்டரில் டில்லி பா.ஜ., பதிவு ஒன்றை
kejriwal, Arvindkejriwal, Amitshah, HMAmitshah, delhi, Cmkejriwal, CMArvindkejriwal, BJp, AamAdhmiparty, aap,  கெஜ்ரிவால், அரவிந்த்கெஜ்ரிவால், முதல்வர்கெஜ்ரிவால், ஆம்ஆத்மி, பாஜ, அமித்ஷா, உள்துறைஅமைச்சர் அமித்ஷா, டில்லி

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தல் பிப்.,8 அன்று நடக்க உள்ள நிலையில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவாலுக்கும், மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா இடையே வார்த்தை மோதல் அதிகரித்துள்ளது. அமித்ஷா தெரிவித்த குற்றச்சாட்டு அனைத்திற்கும் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று இரவு டுவிட்டரில் டில்லி பா.ஜ., பதிவு ஒன்றை வெளியிட்டது.அதில், டில்லி அரசு வழங்கும் இலவச வைபை வசதியை தேடித்தேடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மொபைல் போன் சார்ஜ் இறங்கிவிட்டது என தெரிவித்திருந்தது.


latest tamil news



இதன் பின் சில மணி நேரங்களில், பா.ஜ.,விற்கு பதிலடி கொடுக்கும் வகையில் , டில்லி முதல்வர் கெஜ்ரிவால் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: '' சார்... டில்லியில் இலவச வைபையுடன் இலவச பேட்டரி சார்ஜிங் வசதியையும் நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். இதற்காக உள்துறை அமைச்சர் மின்சார கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனென்றால், எனது அரசு டில்லி குடிமகன்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கி வருகிறது'' எனக்குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தலின் போது, டில்லியில் உள்ள 1,041 அரசு பள்ளிகளில் 1.2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என கெஜ்ரிவால் அளித்திருந்த வாக்குறுதி குறித்தும் பா.ஜ.,வுக்கும் , அவருக்கும் மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக டில்லி பா.ஜ., டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், சில கேமிராக்களை பொருத்திவிட்டு, ஆளும் ஆம் ஆத்மி கட்சி மக்களை முட்டாள் ஆக்குகிறது என அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார் என தெரிவித்திருந்தது.


latest tamil news


இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், சில சிசிடிவி கேமிராக்கள் உள்ளதைக் கண்டறிந்த பா.ஜ., மற்றும் அமித்ஷாவுக்கு நன்றி. சில நாட்களுக்கு முன்பு வரை , ஒரு சிசிடிவி கேமரா கூட பொருத்தவில்லை என கூறிய பா.ஜ., தற்போது சில கேமராக்களை மட்டும் பொருத்தியுள்ளதாக கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது நாங்கள் அதுனை பள்ளிகளில் இருப்பதை காட்டுகிறோம்'' என பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
25-ஜன-202015:52:06 IST Report Abuse
தாண்டவக்கோன் Sooooopper, Arvind Sir 👌👌👌👌
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
25-ஜன-202013:06:31 IST Report Abuse
Pasupathi Subbian வர வர கழுதை போல ஆனார். எவ்வளவோ எதிர்பார்ப்பு இவர்மேல் ஆனால் காலக்கிரமத்தில் இவரும் மக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றி விட்டார்.
Rate this:
Cancel
Fardhikan - Rajakambeeram,இந்தியா
25-ஜன-202010:44:30 IST Report Abuse
Fardhikan எந்த ஓரு நல்ல காரியமும் செய்ய வக்கில்லை ஆனால் அடுத்தவர்கள் செய்த நல்லவைகளில் குறை சொல்ல மட்டும் முந்தியடித்த்துக் கொண்டு வருவது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X