8 தமிழரை கொன்றவருக்கு பொது மன்னிப்பா?: இலங்கை எம்பி கொதிப்பு

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (23)
Advertisement

கொழும்பு: இலங்கை ராணுவத்தினரால் பிடித்து செல்லப்பட்ட 8 தமிழர்களை படுகொலை செய்த ராணுவ சார்ஜன்டுக்கு பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்த இலங்கை அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.

இது தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு விடுத்துள்ள அச்சுறுத்தல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.





இலங்கை யாழ்ப்பாணத்தில், ராணுவத்தினரால் கடந்த 2000ம் ஆண்டு டிச.,19ம் தேதி, எட்டு தமிழர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். அதில், 5 வயது சிறுவனும், 18 வயது கூட நிரம்பாத மூவரும் இருந்தனர். அதற்கு அடுத்த நாள், கழுத்தறுக்கப்பட்ட நிலையில், மலக் குழியிலிருந்து அவர்கள் அனைவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்த படுகொலையில் தொடர்புடைய, இலங்கை ராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கா உள்ளிட்ட ஐந்து பேர், இலங்கைப் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை, கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடந்து, 2015ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.




அதில், முக்கியக் குற்றவாளியான சுனில் ரத்நாயக்காவுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால், மற்ற நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுவரை சுனில் ரத்நாயக்காவுக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் சிறையில் இருந்தார். இந்நிலையில் அவர் உட்பட, 34 முன்னாள் ராணுவத்தினருக்கு, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பொது மன்னிப்பு வழங்கியதால் அனைவரும் சமீபத்தில், விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு இலங்கைத் தமிழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (ஜன.,23), இலங்கையில் நாடாளுமன்றம் கூடியது.





இதில், சிறிநேசன் பேசியதாவது: மரணத் தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரியை பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க சட்டம் கைகொடுக்கும் போது, சிறையிலுள்ள முன்னாள் தமிழ்ப் போராளிகளை விடுவிக்க சட்டத்தில் ஏன் வழியில்லை? சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில், சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

மிருசுவிலில் தமிழர்கள் எட்டுப் பேரின் குரல்வளையை அறுத்து, படுகொலை செய்த ஒரு மரணத் தண்டனைக் கைதி, பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு விடுத்துள்ள அச்சுறுத்தலாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
25-ஜன-202015:41:47 IST Report Abuse
oce அந்த ராணுவ அதிகாரி செய்த கொலைக்கு அன்றைய இலங்கை அதிபர் ராஜபட்சே முக்கிய காரணம்.அதனால் அவரது உடன் பிறப்பு இப்போது பொது மன்னிப்பு கொடுத்துள்ளார். இவனுங்க ஆட்சி நடக்கும் வரை இலங்கை உருப்படாது.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
25-ஜன-202012:31:24 IST Report Abuse
pradeesh parthasarathy அந்த ஏழு பேரை விடுதலை செய்ய தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை முன்னுதாரணமாக எடுத்து இலங்கையில் அது இன்று நிறைவேற்ற பட்டுள்ளது ... நாம் எது செய்ரோமோ அது சுத்தி சுத்தி நம்மை தான் கடைசியில வந்து தாக்கும் ...
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜன-202010:33:59 IST Report Abuse
skv srinivasankrishnaveni இதேபார்த்துட்டு நிபய கொலைகாரங்களை விடுவிக்கப்போறதா நம்ம நீதிமன்றம் அண்ட் முன்னாள் அரசு அண்ட் இந்நாள் அரசு கேவலமான செயல்தான் ரெண்டும் நிர்பயா பயங்கரமான கொடூரம் , இந்த ஆட்களுக்கு ஆயுள் தண்டனையோ விடுதலையே வோ வந்தால் ஆட்ச்சியே கவிழும் பாருங்கய்யா ப்ளீஸ் ஒரு தாயின் நிலைமையே யோசிக்கவும் எவ்ளோ துடிப்பாங்க நாம் பெண்கள் எல்லோரும் அந்த பொண்ணு பட வேந்தனைகொடூரங்களைப்படிச்சொமில்லியா இன்னிவரை ரேப் நுபடிச்சாலே உடம்பே எரியுது ரேப் பண்ணிட்டு மூதேவி நாயிங்க கொலையு செய்றானுக ஆனால் அவனுக்கு விடுதலை சுதந்திரக்காற்று கிடைக்கும் என்றால் என்னாத்துக்கு இந்த நீதிமன்றம் அண்ட் நீதிபதிகள் எல்லாம் அநேகமா பலரும் பொம்பளே விஷயம் லே பொறுக்கியாகவேதான் இருக்கானுக இது உண்மை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X