முகப்பொலிவின் ரகசியம்: மோடி வெளியிட்ட ருசிகரம்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (19)
Advertisement
PrimeMinister, Modi, SkinGlows, Reveals, Children, PM, NarendraModi, PM_Modi, Awards, பிரதமர், மோடி, நரேந்திரமோடி, முகம், பொலிவு, மாணவர்கள், விருது,

புதுடில்லி: தனது முகம் பொலிவாக இருப்பதற்கு கடின உழைப்பால் வந்த வேர்வையுடன் முகத்தை மசாஜ் செய்வது தான் காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கலை, கலாசாரம், அறிவியல் கண்டுபிடிப்பு, சமூக சேவை, விளையாட்டு, வீர சாகசம் போன்ற பிரிவுகளில் 5 முதல் 18 வயதுடைய 49 மாணவர்களுக்கு நேற்று (ஜன.,23) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பால சக்தி புரஸ்கர் விருது வழங்கினார். அந்த மாணவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அவர்களிடம் மோடி பேசியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் சிலர், உங்கள் முகம் எப்படி பொலிவாக காட்சியளிக்கிறது எனக் கேட்டனர். நான் கடினமாக உழைப்பதால் அதிகமான வியர்வை வெளிவரும்; அதைக்கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால், என் முகம் பொலிவு பெற்றது என எளிமையான பதிலைக்கூறினேன்.




சாதனை மாணவர்கள் தேர்ந்தெடுக்க இரு வழிகள் உள்ளன. ஒன்று, விருது மற்றும் கவுரவம் பெற்றதும், திமிராக இருந்து கொண்டு சாதிப்பதை நிறுத்துவது. மற்றொன்று, விருதுகளை ஊக்கமாக நினைத்து அதைவிட சிறப்பாக செயல்படுவது. விருதுகள் என்பது முடிவல்ல; வாழ்க்கையின் தொடக்கம். இது போன்ற குறைந்த வயதில் நம்பமுடியாத செயல்களை செய்தது ஆச்சரியமாக உள்ளது.

இது ஊக்கமாகவும், எதிர்காலத்தில் இன்னும் நல்ல செயல்களை செய்யவும் நிச்சயம் தூண்டியிருக்கும். கடினமான சூழ்நிலைகளை எதிர்த்து போராட நீங்கள் (மாணவர்கள்) தைரியம் காட்டியுள்ளீர்கள். உங்களுடன் பேசும்போது, எனக்கும் உத்வேகம், ஆற்றல் கிடைக்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
29-ஜன-202017:25:10 IST Report Abuse
Malick Raja அவருக்கு அவரே முன்மாதிரி .. அவருக்கு அவரே ஆசான் .. இப்படி தேநீர்கடை புகழ் தன்னைத்தானே புகழ்ந்துகொள்வதில் அவர்களுக்கு ஆனந்தமாகத்தானே இருக்கமுடியும் ..
Rate this:
Share this comment
Cancel
NILAVAN - Tirunelvei,இந்தியா
28-ஜன-202019:56:10 IST Report Abuse
NILAVAN பிரம்மச்சாரி அதன் மிக பொலிவு , இவரால் நாட்டிலும் எல்லாரும் பொலிவா இருக்காங்க
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜன-202017:20:17 IST Report Abuse
skv srinivasankrishnaveni அவருக்கென குடும்பம் இல்லீங்க அவரோட குடும்பமே நாம்தானே அவருக்கு உறவுகள் அவரின் நலம்க்குபெயர் செய்றோம் யார் செய்றாலோ இல்லியோ நான் செய்றேன் , நான் வணங்கும் என் தெய்வங்களிடம் தின தீபம் ஏற்றியது ஓம் ஷக்தி பராசக்தி தாயே எங்களையே ரூ உழைக்கும் எங்கள் மோடிஜி க்கு நோயிண்டரி பி=வாழவைக்கனின் தாயே என்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X