முந்தைய பா.ஜ. ஆட்சியில் எனது போன் ஒட்டுக் கேட்கப்பட்டது: சஞ்சய் ராவத்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (13)
Advertisement
 #bjp goverment# பாஜஆட்சி, போன், ஒட்டு,சஞ்சய் ராவத்

மும்பை:மஹாராஷ்டிராவில் 2014 - 19 வரை, தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்தது.இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் கூறியதாவது:
மஹாராஷ்டிராவில், கடந்த, அக்டோபரில் நடந்த சட்டபை தேர்தலுக்குப் பின், ஆட்சி அமைப்பதில் பெரும் குழப்பம் ஏ்றபட்டது. தேர்தலுக்குப் பின், பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணி அமைப்பதில், முக்கிய பங்காற்றினேன். அப்போது, எனது போன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டன. இதை, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவரே என்னிடம் தெரிவித்தார்.





என் போன் மட்டுமின்றி, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், சிவசேனா மூத்த தவைர்கள் உட்பட, பலரது போன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இது பற்றி விசாரிக்க, 'சைபர்' பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மாநிலத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைய மூல காரணமாக இருந்தவர் சரத் பவார். அதனால் தான், அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை, மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.இவ்வாறு, சஞ்சய் ராவத் கூறினார்.


விசாரணை நடத்தட்டும்


சிவசேனா எம்.பி.,யின் குற்றச்சாட்டு குறித்து, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது: எனது ஆட்சியில் யாருடைய போனும் ஒட்டு கேட்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர்களின் போன் பேச்சுக்களை ஒட்டுக் கேட்குமாறு, யாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இது பற்றி, மாநில அரசு, தாராளமாக விசாரணை நடத்தட்டும். எனக்கு எந்த அச்சமும் இல்லை. விசாரணை நடத்தி, மக்கள் முன், அறிக்கை சமர்பிக்கட்டும்.இவ்வாறு, அவர் கூறினார் .

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
25-ஜன-202012:49:11 IST Report Abuse
Allah Daniel ////வெற்றிக்கொடி கட்டு - அய்யா இப்படி தான் மோடி இறங்கியுடன் தான் இவங்க வண்டவாளம் வெளியே தெரியும்/// BSNL எஸ்ச்ங்கே கள்ளத்தனமா வீட்டில் வச்சு...BSNL லை ஊத்தி மூடிய ‘தெண்ட நிதி மாறன்’ செம்பு நீ...ஊழலை பத்தி பேசலாமா...
Rate this:
Share this comment
chakra - plano,யூ.எஸ்.ஏ
25-ஜன-202020:55:14 IST Report Abuse
chakraஅந்த தண்ட மாறன் சகோதரர்கள்கிட்ட பணம் வாங்கிவிட்டு விடுவிச்சது யாரு...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
25-ஜன-202012:33:19 IST Report Abuse
Pasupathi Subbian கூட்டணி கட்சிகளின் கை மேலோங்கும் பொழுது, காங்கிரஸ் இதுபோன்ற குற்றசாட்டுகளை கூறி , ஆட்சியை கலைக்க முயலுவது வழக்கம். சாட்சியே இல்லாமல் எதையாவது கூறவேண்டியது, இந்த குற்றசாட்டை திரும்ப தீரும்ப கூறுவதால் அதை உண்மை என்று மற்றவர்களை நம்ப வைப்பது. ஆதாரம் கேட்டால் திசை திருப்புவது என்பது காங்கிரசின் வழக்கமான பாணி. அதையே சிவசேனாவும் கைக்கொள்ளுகிறது.
Rate this:
Share this comment
Cancel
மனு நீதி - Chennai,இந்தியா
25-ஜன-202006:49:55 IST Report Abuse
மனு நீதி ஒட்டு கேட்டிருந்தால் ஏன் நீங்கள் அவர்களை ஏமாற்றி, கழட்டிவிட்டு காங்கிரசின் காலை பிடிக்க போகுக் திட்டத்தை தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்க போகிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X