சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

அமைச்சரின் விழாவில் அ.தி.மு.க., வினர், 'ஜகா!'

Added : ஜன 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
  அமைச்சரின் விழாவில் அ.தி.மு.க., வினர், 'ஜகா!'

சென்னை, திருவேற்காடு நகராட்சியில், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், புதிய சாலைகள் அமைக்கும் பணிக்கான, பூமி பூஜை நடந்தது. காலையில், நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் பாண்டியராஜன், நேரத்தை வீணடிக்காமல், நடைபயிற்சிக்கான உடையிலேயே விழாவிற்கு வந்தார். அமைச்சர் பங்கேற்கும் விழா என்பதால், அ.தி.மு.க., வினர், 'பளிச்'சென வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வந்தனர். பூமி பூஜையை தொடர்ந்து தீவிர துப்புரவு முகாமை துவக்கி வைத்து, குப்பைக் கழிவுகளை அகற்ற, அமைச்சர், களத்தில் இறங்கினார். இதைப் பார்த்த, அ.தி.மு.க.,வினர், 'எப்படி குப்பையை அகற்றுவது... 'டிரெஸ்' அழுக்காயிடுமே...' என தயங்கி, 'ஜகா' வாங்கினர்.நகராட்சி ஊழியர் ஒருவர், 'பூமி பூஜை முடிந்ததும், சாப்பாடு போட்டு அமைச்சர் அசத்துவாருன்னு நினைச்சு, வெள்ளையும் சொள்ளையுமாக வந்த இவுங்க, குப்பையை அள்ள வர சொல்லிடுவாருன்னு பயந்து ஓடுறதைப் பாரு...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கிண்டலாக சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-ஜன-202006:20:33 IST Report Abuse
D.Ambujavalli எல்லாரும் பந்திக்கு தான் முந்துவார்கள் ‘பிரசாதம்’ கிடைக்காதென்றால் பஜனைக்கு யார் வருவார்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X