சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குன்னூர் மாணவி மீது கனடாவில் தாக்குதல்

Updated : ஜன 24, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (30)
Advertisement

குன்னுார்:குன்னூரை சேர்ந்த மாணவி, கனடா நாட்டில் அடையாளம் தெரியாத நபரால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த மாணவி ரேச்சல் ஆல்பர்ட். இவர் கனடா நாட்டில் டொரண்டோவில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார்.இந்நிலையில் அங்கு நேரப்படி காலை 8 மணி அளவில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது , அடையாளம் தெரியாத நபர் கழுத்தில் வெட்டிச் சென்றார்.அருகில் இருந்தவர்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.






இது தொடர்பாக குன்னூரில் உள்ள இவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் உடனடி விசா கிடைக்காததால் மிகவும் அப்செட் ஆகி உள்ளனர்.





இதனிடையே ரோச்சலின் தந்தை செய்தியாளர்களிடம் கூறுகையில், அவர் ஆபத்தான நிலையில் உள்ளார். விசாவிற்கான ஆன்லைன் படிவங்களை நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். எங்களுக்கு அவசர அடிப்படையில் விசா வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. என கூறினார்.

ரோச்சலின் சகோதரி ரெபேக்கா கூறுகையில், இப்போதைக்கு அவர் முக்கிய மான பராமரிப்பு பிரிவில் இருக்கிறார். இருப்பினும் அவரது நிலைமை மோசமாக உள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து அறிய எங்களுக்கு சில மணி நேரம் பிடித்தது.சம்பவம் நடந்தது குறித்து எங்களுக்கு 3 மணி நேரம் கழிந்த பின்னர் குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்தோம் என்றார்.

மேலும் வெளியுறவு துறை அமைச்சருடன் பேசியதை உறுதிப்படுத்திய ரெபேக்கா "அவர் எங்களுக்கு உதவி செய்வதாக என்னிடம் கூறினார். எங்கள் விண்ணப்ப எண் தேவை, அப்போது தான் எங்களுக்கு விசாக்களை வழங்க முடியும் என்றார். இப்போது, ​​விண்ணப்ப எண்ணைப் பெறுவதில் சிக்கல் உள்ளது" என்றார்.

இதனிடையே மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்டுவிட்டரில் பதிவட்டிருப்பதாவது:ரேச்சல் ஆல்பர்ட் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர்களது குடும்ப விசாவிற்கு உதவுமாறு நான் வெளியுறவு துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக எங்களை +91 9873983884 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
26-ஜன-202006:35:18 IST Report Abuse
jay விசா எடுக்க அலையுது
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
25-ஜன-202015:53:30 IST Report Abuse
oce காதல் தோல்வி. தண்ணி போட்டு வெட்டி இருப்பான்.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
25-ஜன-202012:52:48 IST Report Abuse
தாண்டவக்கோன் டீம்காவுக்கு நல்ல வாய்ப்பு .. ஒரு இருவது லட்சம் குடுத்தக்கா கிஸ்ட்டின் ஒட்டு எல்லாம் அள்ளலாம்🤣🤣🤣
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X