பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜன 24, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 இதே நாளில் அன்று

ஜனவரி, 25, 1920 பித்துக்குளி முருகதாஸ்:

கோவையில், சுந்தரம் அய்யர் -- அலமேலு தம்பதியின் மகனாக, 1920 ஜனவரி, 25ல் பிறந்தார். முருக கடவுள் மீதான பக்தியால், தன் பெயருக்கு முன், 'பித்துக்குளி' என்ற புனைப்பெயரைச் சேர்த்துக் கொண்டார். தென் ஆப்ரிக்கா, இலங்கை, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேஷியா, மொரீஷியஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், பக்தி இசைக் கச்சேரிகளை நடத்தி உள்ளார்; பிரபல பக்தி பாடகராக திகழ்ந்தார்.சங்கீத சாம்ராட், கலைமாமணி, குரு சுரஜானந்தா, இல் மதுர கான மாமணி, சங்கீத நாடக அகாடமி, தியாகராஜர் விருது உள்ளிட்ட, விருதுகளை பெற்றவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகள் தெரிந்தவர். ரிஷிகேசம் முதலான வட மாநில வழிபாட்டு தலங்களுக்கு, 1940ல், பாத யாத்திரை சென்றார். 2015 நவம்பர், 17ல் காலமானார்.அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-ஜன-202011:42:05 IST Report Abuse
Bhaskaran ஆடாது அசங்காது வா கண்ணா என்ற பாடலை மிக அருமையாக பாடுவார். இவரை இன்னும் யாரும் இமிடேட் பண்ண வில்லை .பல ராக மாளிகைகளில் பாடுவதால் இவரை யாரும் காப்பியடிக்க முடியவில்லை .நான் சிறுவனாக இருக்கும்போது எங்கள் ஊருக்கு இவர் பாடவந்திருந்த சமயம் இவரிடம் ஆசி வாங்கிய நினைவு உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X