'ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்...' புலம்புகிறார் பாக்., பிரதமர் இம்ரான்

Added : ஜன 24, 2020 | கருத்துகள் (9)
Advertisement
 'ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்...' புலம்புகிறார் பாக்., பிரதமர் இம்ரான்


டாவோஸ்:''பாகிஸ்தானில் மனித சக்திக்கு பஞ்சமில்லை. இயற்கை வளங்களுக்கும் குறைவில்லை. ஆனாலும், 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த ஊழல் ஆட்சிகளால் சீரழிந்துவிட்டோம்,'' என, அந்நாட்டு பிரதமர், இம்ரான் கான் புலம்பியுள்ளார்.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார அமைப்பின், ஆண்டு மாநாடு நடக்கிறது. இதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றுள்ளார். மாநாட்டின் இடைவேளையில், பாகிஸ்தான் குறித்து, இம்ரான் கான் கூறியதாவது:பாகிஸ்தானை உருவாக்கிய எங்கள் முன்னோர் அறிவாளிகள். பாகிஸ்தானை சிறந்த நாடாக உருவாக்க ஆசைப்பட்டனர். எங்கள் நாட்டில், மனித சக்திக்கு குறைவில்லை. இயற்கை வளங்களுக்கும் பஞ்சமில்லை. தாமிரம் மற்றும் தங்கம் என, கனிம வளங்களும் அதிகமாக உள்ளன. ஆனால், பாகிஸ்தான் உருவான போது, அது வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என, எதிர்பார்க்கப் பட்டது. 1960களில், ஆசியாவின் சிறந்த நாடாக பாகிஸ்தான் இருந்தது. அந்த நம்பிக்கையில், மகிழ்ச்சியில் தான் நான் வளர்ந்தேன். ஆனால், அதன்பின், வளர்ச்சிப் பாதையிலிருந்து, பாகிஸ்தான் தடம் புரண்டுவிட்டது.ஹாக்கி, கிரிக்கெட் உட்பட பல விளையாட்டுகளில், பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியது. நான் விளையாடிய காலத்தில், பாகிஸ்தானை விட, ஏழு மடங்கு அதிக பரப்புளவு கொண்ட இந்தியாவை, கிரிக்கெட்டிலும், ஹாக்கியிலும், பாகிஸ்தான் அடிக்கடி தோற்கடித்தது.ஊழல்ஆனால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஊழல் நிறைந்த ஆட்சிகளால், பாகிஸ்தான் சீரழிந்துவிட்டது. பாகிஸ்தானில், ஜனநாயகம் தோற்ற போது, ராணுவம் வந்தது. ஆனால், ஊழல் குறைய வில்லை. சிறந்த அரசு அமைந்தால், பாகிஸ்தான் மீண்டு எழும் என்பதில் சந்தேகமில்லை. என் தாய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அப்போது தான், பாகிஸ்தானில், புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவமனை இல்லை என்பதை உணர்ந்தேன். நான், புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை கட்டிய போது, அதில் இலவச சிகிச்சை அளிக்க முடியாது என, பலரும், என்னிடம் தெரிவித்தனர்.

ஆனால், 700 கோடி ரூபாயில், மருத்துவமனை கட்டினேன். ஆண்டுக்கு, 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. லட்சியம்எனினும், 70 சதவீதம் பேருக்கு, இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. நான், அரசியலில் நுழைந்த போது, பலரும் என்னை கேலி செய்தனர். ஆனால், என் லட்சியத்தை கைவிடவில்லை. பாகிஸ்தானில் நிலக்கரி வளமும் அதிகமாக உள்ளது. ஆனால், உற்பத்தியில் கவனம் செலுத்தப்படவில்லை. அதேபோல், பாகிஸ்தானில், பசுக்களுக்கும், எருமைகளுக்கும் பஞ்சமில்லை. இருந்தும், பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாகிஸ்தானை விட, குறைவான எண்ணிக்கையில், பசுக்கள் மற்றும் எருமைகளை வைத்திருக்கும் சீனா, அதிகளவில் பால் உற்பத்தி செய்கிறது. வெளிநாடுகளில் பணியாற்றும் பாகிஸ்தானியர், தாயகத்துக்கு திரும்பி வந்து, பாகிஸ்தானின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்.பாகிஸ்தானில், பெரும்பாலான குழந்தைகள், ஆங்கில வழி பள்ளிகளில் படிப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும். பாகிஸ்தானில் சிறந்த நிர்வாகம் அளித்து, தொழில் துவங்குவதற்கான சூழலை ஏற்படுத்துவதே என் லட்சியம். ஆனால், நாட்டில் புறையோடிவிட்ட ஊழல், இதை தடுக்கிறது. பொறுமைபாகிஸ்தான் பிரதமராக, நான் பொறுப்பேற்ற பின், பல சீர்த்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கான பலன்கள் கிடைக்க, சற்று காத்திருக்க வேண்டும்.பொது வாழ்வில் ஈடுபட துவங்கியவுடன், என் மீதான விமர்சனங்களும் துவங்கிவிட்டன. பிரதமராக பொறுப்பேற்றபின், என்னை விமர்சிப்பதே பணியாகக் கொண்டு ஊடகங்கள் செயல்படுகின்றன.அதனால், நான், 'டிவி' சேனல்களில், விவாதங்களை பார்ப்பதில்லை. செய்தி தாள்களை படிப்பதையும் நிறுத்தி விட்டேன். கஷ்டப்பட்டால்தான் எதையும் பெற முடியும். பாகிஸ்தானுக்கு நல்ல நாட்கள் காத்திருக்கின்றன. அதுவரை மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தை சீரழிப்பது மிகவும் எளிது. ஆனால், சீரமைப்பது எளிதல்ல. இவ்வாறு, இம்ரான் கான் கூறினார். 'சூரியனை பூமி சுற்றவில்லை'டாவோசில், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து, பாக். பிரதமர் இம்ரான் கான் பேசினார். இந்த சந்திப்புக்கு முன், ஆப்கானிஸ்தான் பிரச்னை பற்றி தான், டிரம்புடன் முக்கியமாக பேசப்போவதாக இம்ரான் தெரிவித்தார்.சந்திப்புக்கு பின், இம்ரான் கூறுகையில், 'ஆப்கனில், தலிபான் பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்படும், ஹக்கானி பயங்கரவாதி கள், பாகிஸ்தானில் இல்லை' என தெரிவித்தார்.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, 'இம்ரான கான் கூறுவது, சூரியனை பூமி சுற்றவில்லை என சொல்வது போல் உள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
30-ஜன-202004:29:52 IST Report Abuse
 nicolethomson டிபிகல் பாக் மெண்டாலிட்டி , பாகிஸ்தான் காரன் கிரிக்கெட்டில் ஹாக்கியில் என்று கூறியுள்ளான் இவன் , கிரிக்கெட் போட்டியில் கொட்டாவி விட்டுக்கொண்டு நின்றிருந்த பாகிஸ்தான் வீரனை பார்த்தானா அந்த நாட்டின் பிரமதர்? இல்லை எந்த பெண்ணிடம் ஜொள்ளுவிடலாம் என்று அலைந்து கொண்டிருந்தானா ? பேசாம மொத்த நாடும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளுங்க
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
29-ஜன-202004:48:09 IST Report Abuse
meenakshisundaram இம்ரான் காரனுக்கு வயிற்றிலே அல்சர் அல்லது புற்று நோய் இருக்கலாம் -'இந்தியாக்காரன் நல்லா இருக்கானே?'
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
27-ஜன-202021:35:22 IST Report Abuse
r.sundaram தன்வினை தன்னை சுடும். தீவிரவாதத்தை ஆதரித்தால் அந்த நாட்டுக்கு தீவிரவாதத்தாலேயே அழிவு ஏற்படும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X