'சாதனை சிறுவர்களிடம் இருந்து சக்தி கிடைக்கிறது'

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (7+ 19)
Advertisement
 'சாதனை சிறுவர்களிடம் இருந்து சக்தி கிடைக்கிறது'

புதுடில்லி,:பல்வேறு பிரிவுகளில், தேசிய விருதுகளை வென்ற சிறுவர் - சிறுமியரின் பணிகளைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, ''அவர்களிடமிருந்து உத்வேகமும், சக்தியும் பெறுகிறேன்,'' என்றார். சமூக சேவை, கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை, கலாசாரம் மற்றும் வீரதீர செயல் என, பல்வேறு துறைகளில் பங்களித்ததற்காக, 5 முதல், 18 வயதுக்குட்பட்ட சிறுவர் - சிறுமியருக்கு, பிரதம மந்திரியின், 'பாலர்' விருதுகள், வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, பாலர் விருது வென்ற சிறுவர் - சிறுமியரை, பிரதமர் மோடி, நேற்று தன் இல்லத்திற்கு வரவழைத்து, அவர்களின் பணிகளை பாராட்டி பேசியதாவது:

சமூகம் மற்றும் தேசத்தின் மீது, உங்களின் கடமை குறித்த விழிப்புணர்வை கண்டு, நான் பெருமைப்படுகிறேன். நீங்கள் அனைவரும், இந்த இளம் வயதில், வெவ்வேறு துறைகளில் சாதித்த விதம், செய்துள்ள பணிகள், எனக்கு ஆச்சரியத்தை தருகின்றன. உங்களுடைய துணிச்சலான பணிகளை பற்றி கேட்கும்போது, எனக்கு உத்வேகமும், சக்தியும் கிடைக்கிறது. நீங்கள் அனைவரும், உங்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக, நிறைய தண்ணீர், பழச்சாறு குடியுங்கள்.இவ்வாறு, பிரதமர் மோடி கூறினார். பாலர் விருதுகளை வென்ற சிறுவர் - சிறுமியருக்கு, மத்திய அரசின் சார்பில் பதக்கம், 1 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. இந்த விருது பெற்ற, 49 பேரில், தர்ஷ் மலானி, ௧௨, உலகளவில், 50க்கும் மேற்பட்ட, 'மேஜிக் ஷோ'க்களை நடத்தியுள்ளார்.

நேபாளத்தில் சாகர்மாதா கூட்டம்பிரதமர் மோடிக்கு அழைப்புநேபாள தலைநகர் காத்மாண்டுவில், 'சாகர்மாதா சம்பாத்' என்ற பெயரில் காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுபற்றி, நேபாளத்தின் வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி, நேற்று கூறியதாவது: உலகளாவிய பிராந்திய மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க ஏப்., ௨ முதல், ௪ம் தேதி வரை காத்மாண்டுவில், 'சாகர்மாதா சம்பாத்' என்ற பெயரிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.காலநிலை மாற்றம், மலைகள் மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம் என்ற தலைப்பில் நடைபெறும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துள்ளோம். பாக்., பிரதமர் இம்ரான் கான் உட்பட, 'சார்க்' நாடுகளின் தலைவர்களும், இதில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக, 'சார்க்' நாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7+ 19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthikeyan - Madurai,இந்தியா
25-ஜன-202013:44:31 IST Report Abuse
Karthikeyan இப்படியே சினிமா வசனம் பேசிட்டே இருக்கவேண்டியதுதான்... வேற ஒன்னும் முடியாது உங்க ஆட்சியில்..
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-ஜன-202011:46:13 IST Report Abuse
Malick Raja இந்தியர்கள் கொடுப்பினை உள்ளவர்கள் அதனால்தான் இதுபோன்றவர்கள் உண்மையானவர்களாக தெரிகிறார்கள் .. காலம் காளானால் மட்டுமே விடை பகரும் என்பதுமட்டும் அழியாத அழிக்கமுடியாத உண்மை ..
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-ஜன-202011:42:48 IST Report Abuse
Malick Raja சொல்பவர் குடும்பஸ்தர் .. என்பதால் செய்வது உண்மைதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X