வாக்காளர் அட்டையுடன், 'ஆதார்' எண் இணைப்பு: பார்லி., தொடரில் தாக்கலாகிறது மசோதா

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (10) | |
Advertisement
வாக்காளர் அடையாள அட்டையுடன், 'ஆதார்' எண்ணை இணைப்பதற்கு, வழி வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை, வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.போலி வாக்காளர்களை கண்டறிந்து, குளறுபடிகளை நீக்கி, சரியான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையம், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக,
வாக்காளர் அட்டை, ஆதார்எண், இணைப்பு 

வாக்காளர் அடையாள அட்டையுடன், 'ஆதார்' எண்ணை இணைப்பதற்கு, வழி வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை, வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

போலி வாக்காளர்களை கண்டறிந்து, குளறுபடிகளை நீக்கி, சரியான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையம், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில், தீவிரம் காட்ட துவங்கியது.

இதற்காகவே, 2015 ஜனவரியில், அனைத்து மாநில தேர்தல் அதிகாரி களுக்கும், தலைமைத் தேர்தல் ஆணையம், ஒரு கடிதத்தை அனுப்பியது. அதில், ஆதார் எண்களை சேகரித்து, வாக்காளர் அடையாள அட்டை யுடன் இணைக்கும் பணிக்கு தயாராகும்படி கேட்டிருந்தது. ஆனால், இந்த நடவடிக்கைக்கு, அதே ஆண்டின் ஆகஸ்டில், உச்ச நீதிமன்றம் தடை விதித்து விட்டது.


முட்டுக்கட்டை

உரிய சட்டம் இல்லாமல், ஆதார் எண்களை சேகரிக்க கூடாதென, அந்த உத்தரவில் தெளிவாக கூறப்பட்டுஇருந்ததால், இணைக்கும் பணிக்கு முட்டுக்கட்டை விழுந்தது.இதனால், மறு உத்தரவு வரும்வரை, ஆதார் எண் சேகரிப்பது தொடர்பான அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும், தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இருப்பினும், இந்த இடைப்பட்ட காலத்தில், 38 கோடி வாக்காளர்களுக்கான ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டுவிட்டன. இவற்றை ஒழுங்குபடுத்தவும், எடுத்துக் கொண்ட குறிக்கோளை நிறைவேற்றவும், மத்திய அரசுக்கு, தலைமை தேர்தல் ஆணையம் சார்பில், பல முறை கடிதங்கள் எழுதப்பட்டன.அவற்றில், 'புதிய வாக்காளர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண்களை, கேட்டுப் பெறுவதற்கான அதிகாரத்தை தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கும் வகையில், உரிய சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டன.

இந்நிலையில் தான், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது. அதன்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 ல் திருத்தம் கொண்டு வரும் வகையில், சட்ட வரைவு மசோதா தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.


ஒப்புதல்

மத்திய சட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட வரைவு மசோதா தயாரானவுடன், விரைவில், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு, அனுப்பி வைக்கப்படும். வரும், 31ம் தேதி, இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வழிவகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை, இந்த கூட்டத்தொடரிலேயே பட்டியலிட்டு, நிறைவேற்ற உள்ளதாக, மத்திய அரசின் தகவல்அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
25-ஜன-202019:34:05 IST Report Abuse
GMM வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் அட்டை எண் இணைப்பு ஒரு சீர்திருத்தம் தான். ஒருவருக்கு ஒரு தொகுதியில் நிரந்தர வாக்கு உரிமை. 5 ஆண்டுகள் குறைந்தது அந்த தொகுதியில் குடியிருப்பவர் மட்டும் ஓட்டு போட, தேர்தலில் நிற்க கட்டுப்பாடு. ஒருவருக்கு ஊராட்சி, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் ஒன்றில் ஓட்டுப்போட அனுமதி. குற்ற செயல்கள் வரைமுறை படுத்தி வாக்காளர்கள் ஓடு போட, வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி கூடாது. ஒரு முறை இட ஒதுக்கீடு. மறுமுறை பிற சமுதாய வேட்பாளர்கள் மட்டும். ஓட்டுக்கு பணம் தடுக்க வேண்டும். வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்க கூடாது. பொது இடத்தில் கூடி வாக்கு சேகரிக்கலாம். தேர்தல் ஆணையம் தான் விரைந்து சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
25-ஜன-202019:31:58 IST Report Abuse
Indian  Ravichandran நிச்சயம் தேவை ஊருலே ஒரு வோட்டு சிட்டியில் ஒரு ஓட்டுனு நிறைய இருக்கு, கள்ளவோட்டை தடுத்தாள் போதும் பாதி அரசியல் சரியாகும். குடியுரிமை சட்டம் முழுமை பெற்றுவிட்டால் மீதி அரசியலும் சரியாகும் , குடி உரிமை பதிவை சீக்கிரம் தொடங்குங்கள் நான் நிறைய எதிர்பார்க்கிறேன் மோடி ஜி.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
25-ஜன-202016:59:10 IST Report Abuse
Rengaraj நல்ல முயற்சி. நிறைவேறட்டும்.ஜனநாயகம் தழைக்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X