எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு : விரைவாக விசாரிக்க தி.மு.க., மனு

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (7)
Advertisement
 எம்.எல்.ஏ.,க்கள் ,தகுதி நீக்கம், வழக்கு,தி.மு.க., மனு

புதுடில்லி, 'தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி தாக்கல் செய்து உள்ள வழக்கை, விரைவில் விசாரிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தல், 2016ல் நடந்தது. இதில், அ.தி.முக., வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, 2016, டிசம்பர், 5ல் இறந்தார்.


பெரும்பான்மை



இந்நிலையில், 2017 பிப்ரவரியில், முதல்வர், இ.பி.எஸ்., தலைமையிலான அரசு, சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தியது. அரசுக்கு எதிராக, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 10 பேர் ஓட்டளித்தனர். எனினும், பெரும்பான்மை இருந்ததால், நம்பிக்கை ஓட்டெடுப்பில், இ.பி.எஸ்., அரசு வெற்றி பெற்றது.

அதன்பின், காட்சி கள் மாறின. அ.தி.மு.க., வின், இரு அணிகளும் இணைந்தன. அரசுக்கு எதிராக ஓட்டளித்த பன்னீர்செல்வம், துணை முதல்வரானார்; பாண்டியராஜன், அமைச்சரானார். அவர்கள் மீது, சபாநாயகர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க., கொறடா சக்கர பாணி, உயர் நீதிமன்றத் தில் மனு செய்தார்; அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதேபோல், முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் ஆகியோரும், 11 பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது.
பரிசீலனை
இந்நிலையில், இந்த வழக்கை விரைவில் விசாரிக்க கோரி, தி.மு.க., சார்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நேற்று மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, கபில் சிபல் கூறியதாவது:

மணிப்பூரில், வனத்துறை அமைச்சர் ஷியாம்குமார் சிங்கை தகுதி நீக்கம் செய்வது பற்றி சபாநாயகர் உடனே முடிவு செய்ய, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. அதனால், தமிழகத்தில், 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி, நாங்கள் தாக்கல் செய்துள்ள மனு மீது, விரைவில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.கபில் சிபலின் கோரிக்கையை பரிசீலிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜன-202019:00:41 IST Report Abuse
தமிழ் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்குதோ இல்லையோ,
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஜன-202015:41:42 IST Report Abuse
தமிழ்வேல் "காரணம் தெரிவிக்காமல்" இவ்வளவுகாலம் இழுத்தடிப்பது கோர்ட் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும்.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
25-ஜன-202015:33:27 IST Report Abuse
Anand இப்படி ஏதாவது செய்து குறுக்கு வழியில் சென்றாலும் முதல்வர் ஆக ஆக முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X