அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பெண் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது

Added : ஜன 24, 2020
Advertisement
 'பெண் குழந்தை பிறப்பு  விகிதம் அதிகமாக உள்ளது

சென்னை :''நாட்டில், தமிழகத்தில் தான், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில், பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது. மருத்துவ மாணவியர், இளஞ்சிவப்பு நிற உடையணிந்து பங்கேற்ற பேரணியை, அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.பின், விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:இந்தியாவிலேயே பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், தமிழகத்தில் தான் அதிகம். இந்திய அளவில், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 914 பெண் குழந்தைகள் என, பிறப்பு விகிதம் உள்ளது. தமிழகத்தில், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 943 பெண் குழந்தைகள் என, பிறப்பு விகிதம் உள்ளது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை, மேலும் அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.பொதுமக்களும், ஆண் குழந்தைகள் தான் வேண்டும் என்ற நிலையை மாற்றி, வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் போதும் என, நினைக்க துவங்கி விட்டனர். கருவில் உள்ள குழந்தை, ஆணா, பெண்ணா என்பதை சொல்லக் கூடாது என்ற, சட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X