அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிப்., 2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம்: தி.மு.க., கூட்டணி முடிவு

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (26+ 63)
Advertisement
 பிப்., 2 முதல் 8 , கையெழுத்து, இயக்கம்,ஸ்டாலின்

சென்னை :'குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக, பிப்ரவரி, 2 முதல், 8ம் தேதி வரை, கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்' என, தி.மு.க., கூட்டணி கட்சிகள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.


குடியுரிமை திருத்த சட்டம்



தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, துணை பொதுச்செயலர் சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும்,தேசிய மக்கள் தொகை பதிவேடு,தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை நிறுத்தக் கோரியும், பிப்ரவரி, 2 முதல், 8ம் தேதி வரை, கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். நல்ல தீர்வுஇந்த கையெழுத்து படிவங்கள், ஜனாதிபதியை சந்தித்து அளிக்கப்படும்.இவ்வாறு, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:தமிழகம் முழுவதும், மக்களை சந்தித்து, மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நடத்த முடிவு செய்திருக்கிறோம். பொது மக்களின் கையெழுத்துகளை பெற்று, ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து வழங்க முடிவு செய்துள்ளோம். 'குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை' என, உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லி இருக்கிறார். நாங்கள் தொடர்ந்து, எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம்.

நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான், இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். ஈ.வெ.ராமசாமி சிலை தொடர்ந்து தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. தமிழினத்திற்காக குரல் கொடுத்த, ஈ.வெ.ரா., சிலையை இழிவுபடுத்துவது, வெட்கப்பட வேண்டிய ஒன்று. 'நீட்' நுழைவுத் தேர்வு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும், அ.தி.மு.க., அரசு இரட்டை நாடகம் போடுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26+ 63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
29-ஜன-202004:51:03 IST Report Abuse
meenakshisundaram ஐயோ எட்டாம் தேதி வரை கையெழுத்து வாங்கிவிட்டு ஒன்பதாம் தேதி காலைலே இவரு 'கோட்டை'இல் கொடி ஏற்றப்போகிறாரா?-சொல்லுங்கய்யா சொல்லுங்க
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
25-ஜன-202022:55:43 IST Report Abuse
Tamilselvan அதில் கீழ்கண்டவற்ற்றையும் சேர்த்து கொள்ளவும். 1 .நீட்,ஸ்டெரிலைட்,ஈத்தேன் போன்ற பல பிரச்சனைகளை தொடங்கியதும் நாம்தான். 2 ஸ்பெக்ட்ரம்,தொலைபேசி இணைப்பு ஊழல்,என செய்து சாதனை படைத்தவர்கள் நாம் தான் 3 தொண்டர்களின் உழைப்பை திருடி,,அவர்களது இரத்தத்தை உறிஞ்சி ,குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் பதவி கொடுத்து குடும்பத்தோடு கொள்ளை அடிப்பது நாம் தான்.4 . பதவியில் இருக்கும் போது லட்ச கண்க்கில் தமிழர் இறந்தாலும் கண்டு கொள்ளாமல் அட்டை போல பதவியில் ஒட்டி கொண்டு இருப்பது,பதவியில் இல்லாத போது இனம், மொழி,சமூக நீதி என கபட நாடகம் ஆடுவது நாம் தான். 5 .பதவிக்காக கொள்கைகளை காய் விட்டு காவி கட்சியுடன் பதவியில் இணைத்து பதவி சுகம் அனுபவிப்பது.பதவியில் இல்லாத போது,காவி நச்சு பாம்பு என வீர வசனம் பேசுவது 6 நிலபகரிப்பு,செய்து வழக்கு வந்தால் பொய் காலில் விழுவது .7 திருமங்கலம் பார்முலா கண்டுபுடித்து ,பல குடோன் துரைகளை உருவாக்கியது .8 தேர்தலில் இந்துக்களின் ஓட்டுக்களை பிச்சை எடுத்து விட்டு பதவிக்கு வந்ததும் இந்துக்களை கேவலமாக பேசுவது,அவர்கள் வணக்கும் கடவுள்களை கேவலமான முறையில் இழிவு படுத்துவது ,காலணிகளால் அடிப்பது போன்ற ஈன செயக்கிளை செய்வது நாம் தான் என சேர்த்து கையெழுத்து வாங்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
25-ஜன-202022:44:18 IST Report Abuse
anbu இவர்கள் வரும் நாளில் மறந்தும் பிரியாணி ஆக்க வேண்டாம். அப்படி ஆக்கி அதை மறைத்தாலோ அல்லது அது வந்தவர்களுக்கு போதாமல் விட்டாலோ என்ன நடக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X