அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆளுமைமிக்கவர் ரஜினி ஆதரிக்கிறார் ஞானதேசிகன்

Added : ஜன 24, 2020 | கருத்துகள் (14)
Advertisement
 ஆளுமைமிக்கவர் ரஜினி ஆதரிக்கிறார் ஞானதேசிகன்

சென்னை, :'நடிகர் ரஜினி, தன் பேட்டியில், நான் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க மாட்டேன் என சொன்னது, அவருடைய ஆளுமையை குறிக்கிறது' என, த.மா.கா., மூத்த துணை தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். அவரது அறிக்கை:கடந்த, 1971ல், தி.க., நடத்திய ஊர்வலத்தில், ஹிந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்டனர் என்பதை, சோ.ராமசாமி, தன், 'துக்ளக்' இதழில் வெளியிட்டார். அதைத் தான், ரஜினி சுட்டிக்காட்டி பேசினார்.

அவரது பேச்சு பொருத்தமானது. ஈ.வெ.ராமசாமி பற்றி இழிவாகவோ, அவருடைய சமூக சீர்திருத்தங்களை குறைத்தோ, ரஜினி பேசவில்லை. ஆனால், ஈ.வெ.ராசாமியை அவமதித்து விட்டது போல சிலர் ஆர்ப்பாட்டம் செய்வது, ஏற்கக் கூடியது அல்ல. அன்றைய தி.மு.க., அரசால், போலீஸ் துறையினரால், கடைகளில் இருந்து, அந்த இதழ் பறிமுதல் செய்யப்பட்டது உண்மை. சொல்லாத கருத்துக்களை சொன்னதாக சொல்வதும், சொன்ன கருத்துக்களை சொல்லவில்லை என்பதும், நடந்த நிகழ்வுகளை நடக்கவில்லை என சாதிப்பதும், பொது வாழ்வில் தவறானது. கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், என்ன நடந்தது என்பதை, இன்றைய சந்ததியர் தெரிந்து கொள்வதில் தவறில்லை. ரஜினி, மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க மாட்டேன் என சொன்னது, அவருடைய ஆளுமையை குறிக்கிறது. இவ்வாறு, ஞானதேசிகன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-ஜன-202014:15:00 IST Report Abuse
Malick Raja இவரை ஒரு மிகப்பெரிய தலைவராக உருவத்தில் மதிப்பதே சரியாகும்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
26-ஜன-202013:13:52 IST Report Abuse
Nallavan Nallavan அரசியல் அனாதைகளுக்கு சூப்பருதான் கண்கண்ட தெய்வம் ......
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
25-ஜன-202016:54:16 IST Report Abuse
dandy ஹி ஹி ஹி கன்னட நடிகனுக்கு வாயை வாடகைக்கு விட டாஸ்மாக் நாட்டில் டொமில் டொலைவர்கள் அதிகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X