60 வயது மூதாட்டிக்கு 22 வயது இளைஞனுடன் காதல்

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (21)
Advertisement
மூதாட்டி,இளைஞன்,காதல்

ஆக்ரா: உத்தர பிரதேசம் ஆக்ரா அருகே ஏழு குழந்தைகளின் தாயான 60 வயது மூதாட்டிக்கும் 22 வயது இளைஞனுக்கும் ஏற்பட்ட காதல் திருமணம் நோக்கி சென்றதால் மூதாட்டியின் கணவர் போலீசில் புகார் அளித்தார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிரகாஷ் நகர் எட்மாடுடாவுலா காவல் நிலையத்திற்கு விநோதமான புகார் ஒன்று வந்தது.

ஏழு குழந்தைகளின் தாயான 60 வயது மூதாட்டியின் கணவர் அந்த புகாரை அளித்தார். அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனுக்கும் தன் மனைவிக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக புகாரில் தெரிவித்திருந்தார்.

அதிர்ச்சியடைந்த போலீசார் மூதாட்டி இளைஞன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விசாரணைக்காக அழைத்தனர்.பின் விளைவு குறித்து கவலைப்படாத மூதாட்டியும் இளைஞனும் தங்கள் காதலில் உறுதியாக இருப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் போலீசாரிடம் கூறினர். 'திருமண முடிவு சரியல்ல இருவரும் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்' என குடும்பத்தினர் மற்றும் போலீசார் அறிவுரை கூறினர்.

அதை ஏற்காமல் இருவரும் வீம்பு பிடித்ததால் அந்த இளைஞன் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் காதல் ஜோடியை எச்சரித்து அனுப்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar Raghavan - muscat,ஓமன்
31-ஜன-202000:12:37 IST Report Abuse
Shekar Raghavan உள்டப்ரதேஷ் எல்லாமே உள்டதான்
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
30-ஜன-202014:28:26 IST Report Abuse
Cheran Perumal உ பி போலீசாருக்கு நம்ம ஈ வே ரா வைப்பற்றி எடுத்துச்சொல்லவும்.
Rate this:
Share this comment
Cancel
mani - thirumayam,இந்தியா
30-ஜன-202009:19:16 IST Report Abuse
 mani இந்த கல்யாணம் நடக்க வேண்டும் என்று , தமிழ் நாட்டில் உள்ள சில கட்சி தலைவர்கள் என்று உ பி பயணம் ஆகையால் தமிழ்நாடு மக்கள் அதருவு தாரீர் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X