சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமர் படத்துடன் பேரணிக்கு முயற்சி: சேலத்தில் பா.ஜ.,வினர் கைது

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (18)
Advertisement
சேலம், ராமர்படம், பேரணி, முயற்சி, பாஜ, கைது

சேலம்: சேலத்தில் ராமர் படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஆன்மிக பேரணி நடத்த முயற்சித்த பா.ஜ.வினர் கைது செய்யப்பட்டனர்.
சேலத்தில் 1971ல் தி.க. சார்பில் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமர் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்ததாக நடிகர் ரஜினி பேசினார்.இதையடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் 'சேலத்தில் ராமர் அவமதிக்கப்பட்ட ஊர்வலம் நடந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் ராமர் படத்துக்கு மலர் மாலை அணிவித்து அதே பாதையில் ஆன்மிக பேரணி நடத்தப்படும்' என பா.ஜ. கட்சியினர் அறிவித்தனர்.

போலீசார் இதற்கு அனுமதியளிக்காத நிலையில் சேலம் செவ்வாய்பேட்டை அரிசி மண்டி அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நேற்று கூடிய பா.ஜ.வினர் அங்கு ராமர் படத்தை வைத்து பூஜை செய்தனர்.பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் லட்சுமணன் பேசியதாவது:கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தி.க. சார்பில் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த கூட்டத்தில் இதே நாளில் ராமர் உள்ளிட்ட ஹிந்து கடவுள்களை அவமான சின்னமாக எடுத்து சென்றனர். அதை துடைத்தெறியும் வகையில் ராமர் படத்துக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்து செல்கிறோம்.

அன்று எதிர்ப்பு கோஷம் எழுப்பிய நாங்கள் தற்போது வெற்றி கோஷமிடுகிறோம். அன்று ஏற்பட்ட அவமானம் துடைத்து எறியப்பட்டதோடு அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டுவதற்கான அச்சாரமாகவும் இந்நிகழ்வு அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

ராமநாமம் கூறியபடி ஊர்வலம் புறப்பட தயாரான போது உதவி கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். பா.ஜ. மற்றும் ஹிந்து முன்னணியினரை கைது செய்து வேனில் ஏற்றும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 49 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
25-ஜன-202022:04:42 IST Report Abuse
chakra பத்து பேர் ஊர்வலம் போனால் அதுக்கு பேர் பேரணியா . 10 கிழட்டு உதவாகரைகள் காவலுக்கு 100 போலீஸ் . தைரியம் இருந்தா போலீஸ் துணை இல்லாம கூட்டம் போடன் பாப்போம் . இங்கே டீ கடை காரனோட முகமூடி கிழிஞ்சு ரொம்ப நாள் ஆச்சு
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
26-ஜன-202007:48:21 IST Report Abuse
கல்யாணராமன் சு.கருத்து சொன்னமுறையிலேயே தரம் தெரியுது ............ எங்கே போனாலும் நாங்க இப்படித்தான் இருப்போம் என்பவர்களை என்ன செய்வது??...
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
26-ஜன-202007:53:30 IST Report Abuse
கல்யாணராமன் சு.எத்தனை பேர்ங்கறது முக்கியம் இல்லை .......... என்ன சொல்றாங்க அப்படிங்கறதுதான். ............ ஒருத்தர் (ரஜனிகாந்த்) ஒண்ணே ஒண்ணு சொன்னதுக்கே திகவும், திமுகவும், இங்கே வரும் அடிவருடிகளும் (பலர்) எப்படி குதிக்கீறிங்க?? ............ கிழட்டு உதவாக்கரைகள் பண்றதுக்கு நீங்க எதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுத்து கருத்து போடணும்?? ...........
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
25-ஜன-202020:41:28 IST Report Abuse
Poongavoor Raghupathy The crowd which is praying Rama is getting arrested and EVR's men who bet Rama with chappals were allowed to burn Rama. This is happening in a State of Tamilnadu wherein we can see at least one small or big temples in many areas. If Hindus are really sincere on the belief of GOD how can DK's attrocities on Hindu Gods could happen. BJP who is preaching Hindutwa must put to an end of all these atrocities with a proper legislation and the Party like DK must be banned in India. The Court must take this as su motto case when Almighty's image is ridiculed and tarnished against the belief of many Hindus.The limit for freedom of actions and speech must come out as laws for punishment. This sort of ill-treatment to GOD can not be seen in any other Country.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
25-ஜன-202018:40:53 IST Report Abuse
bal ஏன் சொரியர் கூட்டத்தின் ஊர்வலத்தை அனுமதித்தீர்....ராமர் படம் எடுத்துக்கொண்டு ஊர்வலம் போகக்கூடாத...ராமர் என்ன தீவிரவாதியா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X