கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 24, 2020 | கருத்துகள் (4+ 67)
Advertisement
ரஜினி, எதிரான, வழக்குகள், தள்ளுபடி

சென்னை, நடிகர் ரஜினிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அவற்றை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையில் நடந்த 'துக்ளக்' இதழின் பொன் விழாவில் ஈ.வெ.ரா. பற்றி நடிகர் ரஜினி அவதுாறாக பேசியதாக சென்னை திருவல்லிக்கேணி கோவை மாவட்டம் காட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்கள் நீதிபதி ராஜமாணிக்கம் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. போலீஸ் தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் வாதாடியதாவது:புகார் அளித்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. போலீசில் வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் உயர் அதிகாரியிடம் தெரிவிக்கலாம்; அதன்பின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம். இப்படி எந்த வழிமுறையும் பின்பற்றாமல் நேரடியாக உயர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர்.

1971-ல் ஈவெரா நடத்திய பேரணி குறித்து நடிகர் ரஜினி பேசியது சர்ச்சையானது. மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. போலீசிலும் புகாரளிக்கப்பட்டது. ஆனால் மன்னிப்பு கேட்க ரஜினி திட்டவட்டமாக மறுத்தார்.

வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு என்னென்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பதை இரு நீதிபதிகள் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' தெரிவித்துள்ளது. ஈ.வெ.ரா. பெரிய தலைவர்; இதழில் வெளியான கட்டுரை அடிப்படையில் பேசியதாக ரஜினி கூறியுள்ளார்.இவ்வாறு அவர் வாதாடினார்.

மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் கான்சியஸ் இளங்கோ லட்சுமி நாராயணன் ஆஜராகி ''புகார்களை உடனே போலீசார் பரிசீலிக்கவில்லை. எனவே புகார்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்'' என்றனர்.உடனே நீதிபதி 'ஏற்கனவே உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை ஏன் பின்பற்றவில்லை. மனுக்களை வாபஸ் பெற போகிறீர்களா' என கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து மனுக்களை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்து மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (4+ 67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
25-ஜன-202022:25:41 IST Report Abuse
தாண்டவக்கோன் போங்க தம்பி இந்த கேவலத்துக்கெல்லாம் பயந்தா முரசொலி படிச்சிட்டு ஓசி சோறு சாப்பிடமுடியுமா?
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
25-ஜன-202012:52:32 IST Report Abuse
Allah Daniel ////வெற்றிக்கொடி கட்டு - துக்ளக் தாண்டி :::: இது தான் துக்ளக்//// என்ன இருந்தாலும்....பிணத்தின் மேல் வச்சா...பிணமே எந்திருச்சு படிக்கும் சக்திவாய்ந்த ‘பகுத்தறிவு’ முரசொலி மாதிரி வருமா...
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
25-ஜன-202007:23:00 IST Report Abuse
blocked user ரங்கராஜ் பாண்டே அந்த சேலத்து மாநாட்டு தீர்மானங்களை எங்கிருந்தோ கண்டுபிடித்து விட்டார். அதை பொது மக்களுக்கு தெரிவித்தால் திகவினர் பாதிக்கு மேல் அவமானத்தில் தூக்கில் தொங்கவேண்டி வரும். ஆகையால் இந்த மனுவை உடனே திரும்பப்பெற்று விட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X