வேட்பாளருக்கு குற்ற பின்னணி இருந்தால் தேர்தலில் நிறுத்த கூடாது: தேர்தல் ஆணையம்

Added : ஜன 25, 2020 | கருத்துகள் (13)
Advertisement
election,candidate,election_commission,வேட்பாளர், குற்றபின்னணி,தேர்தல், கூடாது,தேர்தல்ஆணையம்

புதுடில்லி,: 'குற்றப் பின்னணி உடையவர்களை, அரசியல் கட்சிகள் தேர்தலில் நிறுத்தக்கூடாது' என, இந்திய தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கூறியுள்ளது.

கடந்த, 2018ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 'தேர்தலில் போட்டியிடுவதற்கு முன், வேட்பாளர்கள், தங்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து, தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவேண்டும்.'மேலும், செய்தித்தாள் மற்றும் 'டிவி' வாயிலாக, குற்ற வழக்குகளை விளம்பரம் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.






அறிக்கை

இந்நிலையில், அதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில், நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. நீதிபதிகள் ஆர்.எப்.நரிமன், எஸ்.ரவீந்திர பட் அமர்வு முன், தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றம், 2018ல், வழங்கிய உத்தரவால், குற்றப் பின்னணி உடையவர்கள், அரசியலுக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை. வேட்பாளர்கள், தங்கள் மீதான குற்றப் பின்னணி குறித்து, ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு பதில், அத்தகைய வேட்பாளர்களை, அரசியல் கட்சிகள் தேர்தலில் நிறுத்தக் கூடாது என கேட்டுக் கொண்டால், எந்த பிரச்னையும் இருக்காது. இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'அரசியலில், குற்றவாளிகள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை, இந்திய தேர்தல் ஆணையம், ஒருவார காலத்திற்குள் வரையறுக்க வேண்டும்.


ஆலோசனை


'இந்த வழக்கை முதலில் தொடுத்த, பா.ஜ., தலைவரும், வழக்கறிஞருமான அஷ்வினி உபத்யாய், 'தேர்தல் ஆணையத்துடன் அமர்ந்து ஆலோசனை மேற்கொண்டு, அதற்கான பரிந்துரைகளுடன் வரவேண்டும்' என கூறப்பட்டுஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
25-ஜன-202016:54:35 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN வழக்கை தொடுத்த வழக்கறிஞர் அஸ்வினி தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை மேற்கொண்டுவர நீதி மன்றம் எதற்கு. மற்ற அரசியல் ஆசாமிகள் கொண்டு வரும் வழக்கை அப்படி கூறாமல் ஏதோ ஆதாயம் பெற செயல்படுகிறதோ என அய்யுரவேண்டி யுள்ளது. நீதி மான்கள் நிதியை ஆதாரமாகக் கொள்கிறதோ
Rate this:
Share this comment
Cancel
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
25-ஜன-202016:25:57 IST Report Abuse
Amar Akbar Antony கண்டிப்பாக அப்படியொரு சட்டம் வந்தால் ஆட்சிக்கட்டிலில் அவனவன் மனைவி அமர்வர். எனக்கு தெரிந்து தொன்னூறு சதவிகிதம் பேர் வெளியேற நேரிடும். அந்நாள் பாரதத்தின் பொன்னாளாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-ஜன-202014:24:55 IST Report Abuse
Mani . V "வேட்பாளருக்கு குற்றபின்னணி இருந்தால் தேர்தலில் நிறுத்த கூடாது" - அணைத்து தேர்தலும் முடிந்து, குற்ற பின்னணி உடையவர்கள் மட்டுமே தேர்வானதின் பின் இதை அறிவிக்கும் ஒரே கரகாட்டக் கோஷ்டி நம்ம தேர்தல் ஆணையம்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X