இந்தியாவின் மந்தநிலை தற்காலிகமே: பன்னாட்டு நிதிய தலைவர் அறிவிப்பு

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
இந்தியா, மந்தநிலை,தற்காலிகம்,பன்னாட்டு, நிதியதலைவர், அறிவிப்பு

டாவோஸ்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் மந்தநிலை தற்காலிகமானது என்றும், விரைவில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கலாம் என்றும், பன்னாட்டு நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


முன்னேற்றம்டாவோஸ் நகரில் நடைபெற்று வரும், உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் பங்கேற்று பேசிய, பன்னாட்டு நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, இந்தியாவின் பொருளாதார மந்தநிலை குறித்து இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:கடந்த, 2019 அக்டோபரில், பன்னாட்டு நிதியம், உலக பொருளாதார கண்ணோட்டத்தை அறிவித்தது. அப்போது இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டு ஜனவரியில், நிலைமை முன்னேறி இருக்கிறது.இதற்கு, அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அந்நாடுகளுக்கு இடையேயான
வரி குறைப்புகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

இருப்பினும், உலக பொருளாதார வளர்ச்சி, 3.3 சதவீதம் என்பது திருப்தியான ஒன்றல்ல. இது, மந்தமான வளர்ச்சியாகும். இன்னும் தீவிரமான நிதிக் கொள்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று, நாங்கள் விரும்புகிறோம்.


கணிப்பு

வளர்ந்து வரும் நாடுகளைப் பொறுத்தவரை, அவை முன்னேற்றம் கண்டு வருகின்றன.மிகப் பெரிய சந்தையான, இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை, நாங்கள் குறைத்து அறிவித்தோம். ஆனால், அது தற்காலிகமானது என்று நாங்கள் நம்புகிறோம். விரைவில் இந்தியா முன்னேற்றம் காணும் என, நாங்கள் எதிர்பார்க்கிறோம்.இந்தோனேஷியா, வியட்னாம் ஆகிய நாடுகளில், வளர்ச்சியின் வெளிச்சத்தை காண்கிறோம்.

பல ஆப்ரிக்க நாடுகள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால், மெக்ஸிகோ போன்ற சில நாடுகள் அவ்வாறு இல்லை. அதிக ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டிய உலகில் இருக்கிறோம். இது, ஜனவரி மாதம் தான். உலகப் பொருளாதாரத்துக்கு ஆபத்துகளை துாண்டுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில், பன்னாட்டு நிதியம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 4.8 சதவீதமாக இருக்கும் என, முன்பு கணித்திருந்த நிலையிலிருந்து குறைத்து அறிவித்திருந்தது.
இதற்கு முன், கடந்த அக்டோபரில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.1 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-ஜன-202011:52:27 IST Report Abuse
Malick Raja இந்த தற்காலிக ஆட்சி இருக்கும் வரை இந்த தற்காலிக மந்தநிலை தொடரும் என்பதும் ..மேலும் அனைத்துப்பதிப்புகளும் தற்காலிகமே என்பதும் உண்மை என்றால் சரியக்கத்தானே இருக்கமுடியும் . சீனாவில் கரோனாவைப் போலதானோ ?
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
25-ஜன-202015:30:32 IST Report Abuse
blocked userஎன்னது... சவுதியில் தற்காலிக ஆட்சியா? பாத்து பாய். 'காபிர்' என்று துண்டுதுண்டாக வெட்டி பெட்டியில் வைத்து இந்தியாவுக்கு அனுப்பி விடப்போகிறார்கள்....
Rate this:
Share this comment
Azhagan Azhagan - Chennai,இந்தியா
25-ஜன-202018:22:25 IST Report Abuse
Azhagan Azhaganஊமை கண்ட கனவு தான் இனி உங்கள் ஆட்சி...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
25-ஜன-202008:50:19 IST Report Abuse
ஆரூர் ரங் /உலக பொருளாதார வளர்ச்சி, 3.3 சதவீதம் என்பது திருப்தியான ஒன்றல்ல. இது, மந்தமான வளர்ச்சியாகும். // அதாவது நம் ஏற்றுமதி மார்க்கெட் மந்தம் அதன் பலனை அனுபவிக்கிறோம் வேறுவிதமாக சொல்லப்போனால் உலகப்பொருளாதார சரிவு எனும் களிமண் சேற்றில் நிற்கிறோம் இப்போது அதில் .வேகமாக ஓடுதல் சாத்தியமில்லை உலக பொருளாதார வளர்ச்சியே வெறும் , 3.3 சதவீதம் என இருக்கும்போது அதற்கு மேற்பட்ட வளர்ச்சியே சாதனைதான் .நம்மிடமிருந்து இறக்குமதி செய்யும் பலநாடுகள் வீழ்ச்சியில்தான் இருக்கின்றன இப்போதைக்கு இந்திய மக்கள் செய்யக்கூடியது கூடியவரை இறக்குமதி பொருட்கள் பயன்பாட்டைக் குறைப்பதுதான்
Rate this:
Share this comment
Karthick Madurai - Madurai,இந்தியா
25-ஜன-202011:26:12 IST Report Abuse
Karthick Maduraiஅருமையான விளக்கம்...
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
25-ஜன-202023:33:04 IST Report Abuse
Rajasஉலக பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் 15 நாடுகளில் இந்தியா, சீனா தவிர மற்ற நாடுகளில் மக்கள் தொகை குறைவே. மேலும் இந்த நாடுகள் பொருளாதாரத்தில் நம்மை விட பல மடங்கு அதிகமாக உயர்ந்து விட்டன. உதாரணத்திற்கு மக்கள் வேலை இன்றி இருந்தால் கூட அரசு அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவி தொகை (இந்த உதவி தொகை மிக அதிகம்) கொடுக்கிறார்கள். இனி அடுத்த 10 வருடங்களுக்கு அந்த நாடுகளில் வளர்ச்சி 3 % கீழே இருந்தாலும் கூட மக்கள் பாதிக்க பட மாட்டார்கள். நம் நிலைமை அப்படியா....
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
26-ஜன-202005:57:44 IST Report Abuse
blocked user"மேலும் இந்த நாடுகள் பொருளாதாரத்தில் நம்மை விட பல மடங்கு அதிகமாக உயர்ந்து விட்டன" - சீன அடக்குமுறை ஓகேவா? அல்லது ஜப்பானைப்போல உழைக்கத் தயாரா? இரண்டும் இல்லையே? ஊழல் கிங்க்பினை வெளியே விடவேண்டும் என்று சொல்லும் உனது யோக்கியதை உலகறியும்....
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
25-ஜன-202007:14:26 IST Report Abuse
blocked user நேற்றுதான் ஒரு பொருளாதாரப்பேதை CAA மற்றும் NRC இந்தியப்பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என்று சொன்னார். கிங்க்பின் கூட அதையே சொல்லி கதறிக்கொண்டு இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X