பொது செய்தி

தமிழ்நாடு

மாநில எல்லையில் மாவோயிஸ்ட் முகாம்: தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார்

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 25, 2020
Advertisement

பந்தலுார்: பந்தலுார் கிளன்ராக் வனத்தை ஒட்டிய, கேரள மாநில பகுதியில், மாவோயிஸ்ட்கள் முகாமிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக,
மாவோயிஸ்ட் கள் முகாமிட்டு, சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு,பந்தலுார் கிளன்ராக் வனத்தை ஒட்டிய, முண்டேரி, தண்டக்கல் பழங்குடியின கிராமங்களில் ஒரு பெண் உள்ளிட்ட நான்கு மாவோயிஸ்ட்கள் வந்து முகாமிட்டுள்ளனர்.






இவர்கள் பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டுள்ளனர். பின்னர் அருகிலுள்ள கட்டடத்தில் 'போஸ்டர்'களை ஒட்டி சென்றுள்ளனர்.அதில், எழுதப்பட்ட
வாசகங்களில்,'மழையால் பாதிக்கப்பட்ட தண்டக்கல், கும்பலபாறா, கருப்பபட்டி, வாணியம்புழா, இருட்டுகுத்தி உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் உள்ள மக்களுக்கு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்; பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், முண்டேரி தோட்டக்கலைத்துறை பண்ணையில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.

தகவலறிந்த, கேரள போலீசார் மற்றும் தமிழக அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழக எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X