சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குன்னுார் மாணவிக்கு கனடாவில் கத்திக்குத்து

Added : ஜன 25, 2020
Advertisement
 குன்னுார் மாணவிக்கு கனடாவில் கத்திக்குத்து

குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் புரூக் லேண்ட் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட், ஜெனட் தம்பதியினரின் இரு மகளில், ஒருவர் ரேச்சல் ஆல்பர்ட், 23. கனடா நாட்டில் டொரண்டோ கல்லூரியில், கட்டமைப்பு மேலாண்மை பாட பிரிவில் முதலாம் ஆண்டு மாணவியாக படித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம், நள்ளிரவு, 12:00 மணியளவில், குன்னுாரில் உள்ள அவரது, பெற்றோருக்கு,'ரேச்சலை அடையாளம் தெரியாத நபர், கத்தியால் குத்தி உள்ளார்; அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்' என, போனில் தகவல் வந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சென்னையில் உள்ள, ஆல்பர்ட் நண்பர் மூலம் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை தொடர்பு கொண்டுள்ளனர். அங்கு செல்ல உடனடி, 'விசா' கிடைக்கததால் பெற்றோர், சென்னையில் உள்ளனர். தந்தை ஆல்பர்ட் கூறுகையில், ''இந்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளோம். அங்கு செல்வதற்காக சென்னையில் உள்ளோம். எங்கள் குழந்தையை காக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''மாணவியின் பெற்றோர் கனடா செல்ல, 'விசா' ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X