பொது செய்தி

தமிழ்நாடு

'மலையாளிகள் எண்ணிக்கை தமிழகத்தில் 2 மடங்கு உயர்வு'

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (62)
Advertisement
TamilNadu,Kerala,Malayalam,Tamil,தமிழ்,மலையாளம், கேரளா,தமிழ்நாடு,ஏகேபாலன்,பாலன்,பாண்டியராஜன், அமைச்சர்_பாண்டியராஜன்

சென்னை: ''தமிழகத்தில் மலையாளிகள் எண்ணிக்கை, இருமடங்காக உயர்ந்துள்ளது,'' என, கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஏ.கே.பாலன் தெரிவித்தார்.

கேரள கலாசார துறை, பாரத் பவன், தமிழகத்தில் உள்ள மலையாளிகளின் கூட்டமைப்பு ஆகியவை சார்பில், தமிழக - கேரள கலாசார விழா, சென்னையில் நேற்று துவங்கியது. விழாவை துவக்கி வைத்து, கேரள கலாசார துறை அமைச்சர் ஏ.கே.பாலன் பேசியதாவது: மலையாள மொழியின் தாய் தமிழ். மலையாளம், 12ம் நுாற்றாண்டுக்கு பின், மறுமலர்ச்சி பெற்றாலும், அதற்கான அரசு அங்கீகாரம், பின்னர் தான் கிடைத்தது. நமக்கும், தமிழகத்துக்குமான தொடர்பு எப்போதும் தொடர்கிறது.

தமிழகத்தில், ஏழு லட்சம் பேராக இருந்த மலையாளிகள் எண்ணிக்கை, சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், 14 லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. கேரளாவில், அனைத்து கலைஞர்கள் மற்றும் கலைகளை ஒருங்கிணைக்கும் வகையில் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக, தமிழக - கேரள கலைகள் பரிமாற்றம் நிகழ்த்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

தமிழ அரசின், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பூர்வீகம் கேரளம். அவர், சிறுவயதிலேயே, நாடக கலைஞராக இருந்தார்; அதன்பின், திரைப்பட நடிகராக வளர்ந்தார். அவருக்கு, மலையாள திரைப்படங்கள் மிகவும் உந்துதலாக இருந்தன. அவரின் படகோட்டி பாடலை போலவே, மலையாளத்திலும் ஒரு பாடல் உண்டு; அது, எனக்கு மிகவும் பிடிக்கும். அமைச்சர் பாலன், 'தமிழ் மலையாளத்தின் தாய்' என்றார். தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி, 16 அடி பாயும் என்பர். அது, கேரளாவுக்கு பொருந்தும். தமிழகத்தில் உள்ள மலையாளிகள், கடும் உழைப்பாளிகளாகவும், தொழில்முனைவோராகவும் உள்ளதை காண்கிறோம். இந்த கலைப் பரிமாற்ற விழா, நம் உறவை மேம்படுத்தும். இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில், பின்னணி பாடகி சித்ரா, பாடகர் உன்னி மேனன் உள்ளிட்டோருக்கு, குருவந்தனம் விருதுகள் வழங்கப்பட்டன. கலை, திரைப்பட நிகழ்ச்சிகள் இன்றும், நாளையும் நடக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - JB,மலேஷியா
27-ஜன-202018:10:20 IST Report Abuse
Nesan மலையாளிகள் குணாதிசியங்கள் வேறு மாதரி இருக்கும். காரியம் ஆகணுமுநா எதை வேணுமுனாலும் செய்வார்கள் என்று சொல்லுவார்கள். அவர்கள் தமிழகர்களுக்கு உதவி செய்வது மிக அரிது. எப்ப காலை வாரலாம்னு எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். அவர்களால் முடிந்த காலையும் வாரி விடுவார்கள். சோனியா குடும்பம் கூட மலையாளி கூட்டம் தான் கூட. கழுத்துல ஈரத்துண்டை போட்டு அறுத்துருவானுக சொல்லுவாங்க. தமிழனுக்கு மாதரி தாராள மனம் வரவே வரத்து. இதில் ஒரு சிலர் விதிவிலக்கா இருக்கலாம். குள்ளநரி புத்திகொண்டவர்கள் சந்தேகமே இல்லை
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
26-ஜன-202019:33:37 IST Report Abuse
jagan வெளியில் இருந்து வருபவர்களை வரவேற்கும் அமெரிக்கா உச்சத்தில் உள்ளது. இங்கிருந்து போகும் சுந்தர் பிச்சைகளும், சத்திய நாதலெல்லாக்களும் அமெரிக்கா உயர்த்த இடத்தில் வைக்கிறார்கள், வயிறு எரிவதில்லை. வயித்தெரிச்சல் பார்ட்டிகள் என்றும் உருப்படாது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகமும், இந்தியாவில் முன்னணி மாநிலமே.
Rate this:
Share this comment
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
28-ஜன-202002:35:39 IST Report Abuse
Rajagopalசுந்தர் பிச்சை, நாதெள்ளா போன்றவர்கள் இப்போது சிறுபான்மையினர். அதனால் அவர்கள் மேலே வருவதில் அத்தனை தடை இல்லை. அவ்ரகளைப் போல இந்திய பூர்வீகம் கொண்ட ஒரு அமெரிக்கன் ஜனாதிபதியாக மட்டும் முடியாது. இந்திய சமூகம் அங்கே படித்தவர்களால் நிறைந்தது. வருமானம் அதிகம். அதனால் மரியாதை. இல்லையென்றால் மெக்ஸிகன் போல நடத்தியிருப்பார்கள். வெள்ளைக்காரனுக்கு மேலே மட்டும் போகாமல் பார்த்துக் கொண்டால் வாழ்க்கை நலம்தான்....
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
26-ஜன-202013:51:43 IST Report Abuse
A.George Alphonse மலையாளிகள்,தமிழர்களைப் போல் பரந்த எண்ணம் கொண்டவர்கள் அல்ல.சுயநலவாதிகள். மலையாளம் தான் அவர்களதுமூச்சு.கோயம்புத்தூரில் தமிழ் மீடியத்தில் படித்தாலும் வீட்டில் பேசுவது மலையலாளம் தான். நாம் தமிழர்கள் தான் இளிச்சவாயர்கள்.எல்லா மாநிலத்து காரன்களையும் தலையில் தூக்கிவைத்து கொண்டு தலைவா வருங்கால முதல்வா என்று மகா கேவலமாக,பிதற்றும் அறிவிகள் மலையாளிகள் ஜனதொகை இங்கு ரெட்டிப்பாக ஆகியுள்ளது இதேபோன்று கேரளாவில் நமது ஜனத்தொகையை ரெட்டிப்பாக முடியுமா அல்லது அவர்கள் விடுவார்களா. தமிழா இனியாவது விழித்தெழு .இந்த மாயையையில் இருந்து வெளியே வா.உன்னையும் உன் சக்தியையும் நம்பு.உன்னிலும் நல்லவன், வல்லவன் இருப்பான் உன்னை ஆள.
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
26-ஜன-202019:30:35 IST Report Abuse
jaganஅப்போ மும்பாய் டெல்லி போன தமிழர்கள் தமிழை விட்டு விட்டு ஹிந்தி மட்டுமே படிக்கவேண்டுமா? நமக்கிருந்தால் மொழி பற்று ஆனா மற்றவனுக்கு கூடாது. தக்காளி சட்னி. உங்களை போன்ற பிரிவினை வியாதிகளால் தான் நாடு கெட்டு கிடக்கு. விசாகபட்டணத்தில் இருந்து என்ன தமிழ் வேண்டி கிடக்கு. தெலுங்கில் எழுத பேச பழகுங்கள் (உங்கள் வாத படி)....
Rate this:
Share this comment
TechT - Bangalore,இந்தியா
27-ஜன-202016:30:54 IST Report Abuse
TechTவிசாகபட்டினத்திலோ பெங்களூரிலோ தமிழன் MLA ,MP,MC ஆக முடியாது ...தமிழகத்தில் நிறைய தெலுங்கர்கள் MLA MP MC ஆக உள்ளனர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X