அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு மன உளைச்சல்: மக்கள் நீதி மையம்

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (56)
Advertisement
Kamal,Kamalhaasan,MakkalNeedhiMaiam,கமல், கமல்ஹாசன், மக்கள்நீதிமய்யம், மக்கள்நீதிமையம்

சென்னை: '5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வால் கிராமப்புற மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாவர்' என மக்கள் நீதி மையம் கட்சி கண்டித்துள்ளது.

மக்கள் நீதி மையம் கட்சி துணை தலைவர் மகேந்திரன் அறிக்கை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசின் அறிவிப்பு வந்த உடனேயே அது மாணவர்களின் கல்விக்கு பாதகம் விளைவிக்கும் என எங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தோம். பொதுத் தேர்வு வாயிலாக மாணவர்களின் தேர்ச்சியை கணிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தோம்.





ஆனால் இன்று பொதுத்தேர்வுக்காக பல பெற்றோர் தாசில்தார் அலுவலகங்களில் ஜாதிச் சான்றிதழ் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். பள்ளி கல்வியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வழிவகை செய்வதில் கவனம் செலுத்தாமல் அடிப்படை கல்வி கற்பிப்பதற்கு கூட பல தடைகளை அரசு தொடர்ந்து ஏற்படுத்துகிறது.

இம்மாதிரியான திட்டங்கள் வாயிலாக மாணவர்களை அதுவும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அரசை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கிறது, என அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
25-ஜன-202019:44:07 IST Report Abuse
konanki பிக்பாஸ் தான் மன உளைச்சலுக்கு காரணம். முதலில் அதை நிறுத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
25-ஜன-202019:38:51 IST Report Abuse
konanki வேலூரில் 3ம் வகுப்பு மாணவர்கள் 27% பேருக்கும் albhabets அதாவது அ ஆ /abcd கூட தெரியவில்லை என்று சர்வே ரிப்போர்ட். என்ன சொல்லி தருகிறார்கள்?பரிட்சை இல்லை என்றால் எப்படி இதை சரி செய்வது. அரசியல் செய்யும் மையங்கள் ரஜனி பெரியார் கடவுள் இல்லை என்று ஏதாவது முயற்சி பண்ணுங்க. மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
25-ஜன-202019:26:11 IST Report Abuse
konanki பல கல்வியாளர்கள் யோசித்து பல் வேறு மத்திய மாநில அரசுகளின் அதிகாரிகள் பல மாநிலங்களின் புள்ளி விவரங்கள் துணை வேந்தர்கள் 3 வருடங்களுக்கு மேல் ஆராய்ந்து எடுத்த நடவடிக்கை. இதை பற்றி இப்போது அறிக்கை விட்டுள்ள நபரின் படிப்பு என்ன? அனுபவம் என்ன ?எத்தனை வருடங்கள் மாணவர்களுக்கு கல்வி போதித்தார்? எந்தெந்த வகுப்புகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்? எத்தனை சப்ஜெக்ட் எடுத்து இருக்கிறார்? எத்தனை மாநிலங்களில் இவருக்கு கல்வி அனுபவம்? இந்த கல்வி முறை பலதரப்பட்ட மக்களுக்கான பொதுவான முறை. இந்த முறை வேண்டாம் என்று சொல்லும் அறிவு ஜிவிகள் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டு கல்வி சொல்லி தரட்டும். யாரும் தடுக்க வில்லை. சாமான்ய மக்களை திசை திருப்பும் இந்த எதிர்மறையான விஷயம் தெரியாதவர்களை நாம் நம்ப தேவை இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X