செல்லாத நோட்டுக்களை பெற வேண்டும்: இந்திய அரசுக்கு நேபாளம் வேண்டுகோள்

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (24)
Advertisement
India,Demonetised,DemonetisedCurrency, old500,old1000,Nepal,ForeignMinister,PradeepKumar,இந்தியா, நேபாளம்,செல்லாத_நோட்டு

காத்மாண்டு : நேபாள வங்கியில் உள்ள, செல்லாத, 500, 1000 ரூபாய் நோட்டுக்களை, திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு, இந்தியாவுக்கு, நேபாள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருப்புப் பணத்தை ஒழிக்க, 2016ம் ஆண்டு, நவம்பர், 8ம் தேதி, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என, இந்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், நேபாள நாட்டு வங்கியில், இந்தியாவால் செல்லாது என அறிவிக்கப்பட்ட, நோட்டுக்கள் உள்ளதாகவும் அதை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்றும், நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி தெரிவித்தார்.





இதுகுறித்து, அவர் கூறியதாவது: நேபாள மத்திய வங்கியில், சுமார், ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய, 500, 1000 ரூபாய் நோட்டுக்கள், முறையாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இவற்றை திரும்ப பெறுமாறு இந்திய அரசிடம், கடந்த சில ஆண்டுகளாகவே கோரி வருகிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, இந்த பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். இந்தியா தரப்பில் இருந்து, நேர்மறையான பதில் வரும் என, நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
25-ஜன-202023:11:42 IST Report Abuse
natarajan s நமது நாட்டுக்கு பாகிஸ்தானின் இந்திய கள்ள நோட்டுகள் நேபால் வழியாகத்தான் கொண்டுவரப்பட்டது . ஆகையால் நேபாளிடம் இருக்கும் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் அதிகம் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
25-ஜன-202018:11:42 IST Report Abuse
Girija புதிய நோட்டுகள் மதிப்பை மாற்றாமல் புது கலரில் (வடிவத்தில் என்பது தவறு மன்னிக்கவும் )
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜன-202017:19:18 IST Report Abuse
Tamilan தங்களிடம் உள்ளதில் பாதியை சீனாவிடம் டாலராக மாற்றிக்கொள்ள முடியும்போது மீதமுள்ள பாதியை இந்தியா மாற்றிக்கொடுக்கலாம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X