வனுவாட்டு தீவில் வங்கி கணக்கு: நித்யானந்தா ரகசியம் அம்பலம்

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (55)
Advertisement
nithyananda,bank_account,Vanuatu,Pacific,island,நித்தியானந்தா, நித்யானந்தா,வனுவாட்டு

புதுடில்லி: சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, பசிபிக் பெருங்கடலில் அமைந்து உள்ள, வனுவாட்டு தீவு நாட்டின் தேசிய வங்கியில், கணக்கு வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

சாமியார் நித்யானந்தா மீது, ஆள்கடத்தல், பாலியல் பலாத்காரம், சிறுவர்களை சித்ரவதை செய்தது என பல புகார்கள், குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ளன. இதையடுத்து, நித்யானந்தாவை கைது செய்யும் நடவடிக்கையில், குஜராத் போலீசார் இறங்கினர். எனினும், நித்யானந்தா, இந்தியாவில் இருந்து தப்பி தலைமறைவானார். அவர், ஈக்வடார் நாட்டில் பதுங்கி இருப்பதாக, தகவல் கிடைத்தது. எனினும், அதனை அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது.

இதையடுத்து, நித்யானந்தாவை கண்டுபிடிக்க, சர்வதேச போலீஸ் அமைப்பான, இன்டர்போல், 'புளூ கார்னர் நோட்டீசை' பிறப்பித்தது. இதற்கிடையே, நித்யானந்தா எங்கு இருந்தாலும் கைது செய்வதற்கான, 'ரெட் கார்னர்' நோட்டீசை பிறப்பிக்க, தேவையான முயற்சிகளை, கர்நாடக போலீஸ் எடுத்து வருகிறது. இந்நிலையில், நித்யானந்தா குறித்த சில தகவல்கள், தற்போது கிடைத்துள்ளன.





ஆஸ்திரேலியாவில் இருந்து, 1,750 கி.மீ., தொலைவில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு, வனுவாட்டு. இந்நாட்டில் உள்ள தேசிய வங்கியில், நித்யானந்தா, வங்கிக் கணக்கு வைத்துள்ளது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறப்பு பூஜை செய்ததற்கு கட்டணம் செலுத்துமாறு, நித்யானந்தா தரப்பில், ஒருவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், வனுவாட்டு தேசிய வங்கியின் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதன்மூலம், வனுவாட்டு தலைநகர் போர்ட் வில்லாவில் உள்ள வங்கிக் கிளையில், அவர் கணக்கு வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

உலகில், கார்ப்பரேட் வரி, வருமான வரி என, எந்த வரிகளும் இல்லாத நாடுகளில், வனுவாட்டு நாடும் ஒன்று. அங்குள்ள வங்கியில், கணக்கு தொடங்கும் நபர்களின் தகவல்களும் பத்திரமாக பாதுகாக்கப்படும். இப்படி, பல வசதிகள் உள்ளதால், நித்யானந்தா, அங்குள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
29-ஜன-202016:53:29 IST Report Abuse
Endrum Indian இந்த போட்டோவில் உள்ள இவன் மூஞ்சியை பார்த்தால் தெருவில் போகும் ஒரு சாதாரணன் போல இருக்கின்றான் இவன் சாமியா???அந்த அருள் முகத்தில் கொஞ்சம் கூட இல்லையே???
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
28-ஜன-202021:19:22 IST Report Abuse
Sampath Kumar இது தான் இந்து சாமியாரின் திறமை ?? உங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்ற இறுமாப்பு ? சரி இவர் ஒரு திறமை மிக்க ஏமாற்று பேர்வழி என்று தெரிந்தும் யெஸ் வீ சேகர் போன்றவர்கள் இவர்க்கு வக்காலத்து வாங்கவது ஏன் ? புரியாத புதிர் ??
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Delhi,இந்தியா
26-ஜன-202018:33:09 IST Report Abuse
Rajesh அவனிடம் கையூட்டு வங்கிக்கொண்டு அவனை தப்பிக்க விட்டுட்டு இப்போ கதை சொல்லிகொண்டுஇருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X