பொது செய்தி

இந்தியா

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலையில் இருக்கை

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
MSSubbulakshmi,honour_eminent_women,university_chairs, எம்எஸ்சுப்புலட்சுமி,சுப்புலட்சுமி,பல்கலை,இருக்கை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அறிவியல், இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புகழ் பெற்று விளங்கிய, 10 பெண்களை கவுரவிக்கும் வகையில், அவர்களது பெயர்களில், பல்கலைகளில் இருக்கைகள் உருவாக்கப்படவுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அறிவியல், இசை, சமூக சீர்திருத்தம் உள்ளிட்ட துறைகளில் புகழ் பெற்று விளங்கிய பெண்களை கவுரவிக்கும் வகையில், அவர்களது பெயர்களில் பல்கலைகளில் இருக்கைகள் உருவாக்கி, ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



தமிழகத்தை சேர்ந்தவரும், புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞருமான, எம்.எஸ்.சுப்புலட்சுமி, மராட்டிய ராணி அகில்யா பாய் ஹோல்கர், மருத்துவ துறையை சேர்ந்த அனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி, விஞ்ஞானி கமலா ஷோனி, கல்வியாளர் ஹன்ஷா மேத்தா உள்ளிட்ட, 10 பேரின் பெயர்களில், இருக்கைகள் அமைக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
25-ஜன-202016:50:45 IST Report Abuse
JSS இசை அரசிக்கு ஒரு சிறிய காணிக்கை அவ்வளவுதான். அவரின் பெயருக்கு பெருமையூட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel
25-ஜன-202012:21:22 IST Report Abuse
ருத்ரா காற்றில் இழைந்த கீதத்திற்கு இந்த இருக்கை பெருமை மிகு சிம்மாசனம். மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel
25-ஜன-202010:07:36 IST Report Abuse
J SHANMUGASUNDRAM மிகவும் பெருமையாக உள்ளது, நான் சென்னை மயிலை சம்ஸ்கருத கல்லூரியில் படிக்கும்போது 1996 2001 காலத்தில் இசையரசி அவர்களால் பாராட்டபெற்றேன் குரல்வளம் உச்சரிப்பு நன்றாக உள்ளது மேலும் பயிற்சிபெற்று வளரவேண்டும் என்று வாழ்ததினார்கள் அதை நினைத்து பெருமையடைகிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X