சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி கைது: பிப்., 7 வரை நீதிமன்ற காவல்

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (25)
Advertisement
admk,EX_MP,kcpalanisamy,arrest,அதிமுக,கேசிபழனிசாமி,கைது

இந்த செய்தியை கேட்க

கோவை: அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமியை, கோவையில் இன்று(ஜன.,25) போலீசார் கைது செய்தனர். அவரை, பிப்., 7 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார். இதனையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் (16-03-19) அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அ.தி.மு.க அறிவிப்பு வெளியிட்டது.




காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தெரிவித்தார். இதனையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அ.தி.மு.க அறிவித்தது. இதனிடையே பழனிசாமி, அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்தததாக கூறப்படுகிறது. அதிகாலை கோவையில் உள்ள கே.சி பழனிசாமி வீட்டில் போலீசார் அவரை கைது செய்தனர். மேல் விசாரணைக்காக அவர் சூலூர் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.



இந்நிலையில் இன்று அதிகாலை கோவையில் உள்ள கே.சி.பழனிசாமியின் வீட்டிற்குள் நுழைந்த போலீசார், விசாரணைக்கு பின் அவரை கைது செய்தனர். அதிமுக பெயரில் www.aiadmk.org.in என்ற போலி இணையதளம் நடத்தி வந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பேரில் கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டார். அவர் மீது ஐ.பி.சி., 417, 481, 419, 464, 465 உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் கே.சி.பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து, சூலூர் போலீஸ் ஸ்டேசனில் வைத்து விசாரணை நடத்தினர். இதன் பின்னர் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பிப்., 7 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-ஜன-202012:37:34 IST Report Abuse
meenakshisundaram அம்மாடி நெத்திலே எம்மாம் பெரிய குங்குமம் ?-'சாமி இல்லை ,இல்லவே இல்லை அப்போ ஈவேரா இம்புட்டு கத்தியும் 'யூஸ்' இல்லியா?
Rate this:
Share this comment
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
26-ஜன-202003:25:44 IST Report Abuse
அன்பு அடிமைகளுக்கு இடையே ஒருத்தருக்கு முதுகெலும்பு முளைத்தால், அதை மற்ற அடிமைகள் உடைத்துவிடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
25-ஜன-202022:49:52 IST Report Abuse
இனியவன் கர்நாடகா பாஜக மேகதாது அணை கட்ட ஆரம்பிக்கும் சமயத்தில் இப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொன்னால் என்ன செய்வது?. உத்தரவின்படி அடிமைகள் கைது செய்துள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X